ஹைலைட்ஸ்:

  • யாஷிகாவை கடைசியாக புகைப்படம் எடுத்த பவானி
  • பவானியை நினைத்து வாடும் யாஷிகா

அமெரிக்காவில் வேலை செய்து வந்த பவானி தன் தோழியான நடிகை யாஷிகாவை பார்க்க சென்னை வந்தார். அப்பொழுது அவர்கள் காரில் சென்றபோது கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கினார்கள். காரில் இருந்த பவானி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பலியானார்.

Yashika: படுக்கையிலேயே மோஷன் போறேன், கடவுள் என்னை தண்டித்துவிட்டார்: யாஷிகாகார் விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 5 மாதங்களுக்கு படுத்த படுக்கையாகத் தான் இருக்க முடியும் என்று யாஷிகா தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்படுவதற்கு முந்தைய நாள் யாஷிகா தன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை எடுத்தவர் பவானி தான். அது தான் பவானி எடுக்கும் கடைசி புகைப்படம் என்று தெரியாமல் போய்விட்டதே என ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

இன்று யாஷிகாவின் பிறந்தநாள். ஆனால் பவானி இறந்த சோகத்தில் இருக்கும் யாஷிகா தன் பிறந்தநாளை கொண்டாடாதீர்கள் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

யாஷிகாவால் தற்போதைக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது. அதனால் அவரை ஒப்பந்தம் செய்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வேறு நடிகைகளை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

இதற்கிடையே பவானியை நினைத்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டிருக்கிறார் யாஷிகா. உயிருடன் இருப்பதே குற்ற உணர்வாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் முடிந்த கையோடு லெஃப்ட் அன்ட் ரைட் விட்ட யாஷிகா: யாரை தெரியுமா?மேலும் தான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக வதந்தி பரப்பியவர்களை விளாசியுள்ளார் யாஷிகா.