ஹைலைட்ஸ்:

  • கார் விபத்தை நினைத்து வருத்தப்படும் யாஷிகா
  • வேகமாக கார் ஓட்டவில்லை- யாஷிகா

கடந்த மாதம் 24ம் தேதி இரவு யாஷிகா ஓட்டிச் சென்ற கார், விபத்தில் சிக்கியது. இதில் யாஷிகாவின் தோழி பவானி உயிரிழந்தார். யாஷிகா காரை வேகமாக ஓட்டியது தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் யாஷிகா கூறியிருப்பதாவது,

அமெரிக்காவில் வேலை செய்து வந்த பவானி தன் பெற்றோரை காண ஹைதராபாத் வந்தார். அப்படியே என்னை பார்க்க சென்னைக்கு வந்தார். 24ம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு 11 மணி அளவில் வீடு திரும்பினோம்.

அப்பொழுது தான் விபத்து நடந்தது. நான் காரை வேகமாக ஓட்டவில்லை. சாலை இருட்டாக இருந்தது. நான் காரை டிவைடரில் மோதிவிட்டேன். உடனே கார் மூன்று முறை உருண்டது. பவானி சீட் பெல்ட் அணியாததால் அவர் திறந்திருந்த ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்டார். அதில் அவரின் தலையில் காயம் ஏற்பட்டது.

அன்று இரவு நான் மது அருந்தவில்லை. மேலும் எந்தவிதமான போதைப் பொருளும் பயன்படுத்தவில்லை. துரதிர்ஷ்டவசமாக அந்த விபத்து ஏற்பட்டுவிட்டது. உயிர் வாழ்வதை நினைத்து குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. இந்த குற்ற உணர்வுடன் தான் நான் இனி வாழ வேண்டும்.

நான் பிழைத்திருக்கக் கூடாது. நான் குடிபோதையில் கார் ஓட்டியதாக போலி வீடியோ கூட வெளியாகியிருக்கிறது. தையல்களால் என்னால் சரியாக அழக் கூட முடியவில்லை. ஆன்லைனில் வீடியோ வெளியிட நினைத்தேன். ஆனால் பேசும் நிலைமையில் இல்லை என்றார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லாத யாஷிகா: யார் வீட்டில் இருக்கிறார் தெரியுமா?மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட யாஷிகா தன் வீட்டிற்கு செல்லாமல் நர்ஸ் ஒருவரின் வீட்டில் தங்கியிருக்கிறார்.