ஹைலைட்ஸ்:

  • படுத்த படுக்கையாக இருக்கும் யாஷிகா
  • இறந்த தோழியை நினைத்து வேதனைப்படும் யாஷிகா

நடிகை யாஷிகா தன் தோழி பவானி மற்றும் நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் காரில் வந்தபோது கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பவானி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பல அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாக தங்கையும், தாயும் தெரிவித்தனர். இந்நிலையில் யாஷிகாவுக்கு மேஜர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த யாஷிகாவை சாதாரண வார்டுக்கு மாற்றிவிட்டார்கள்.

இந்நிலையில் அவர் தன் உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

இடுப்பு எலும்பில் பல இடங்களில் முறிவு ஏற்பட்டிருக்கிறது மற்றும் வலது கால் எலும்பும் முறிந்துவிட்டது. அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நடக்கவோ, நிற்கவோ முடியாது. நான் நாள் முழுக்க படுத்த படுக்கையாக இருக்கிறேன். படுக்கையில் தான் மோஷன் போகிறேன்.

இடது பக்கமோ, வலது பக்கமே திரும்ப முடியவில்லை. முதுகிலும் காயம். அதிர்ஷ்டவசமாக என் முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. இது எனக்கு மறுபிறப்பு தான். மனதளவிலும், உடல் அளவிலும் காயம்பட்டிருக்கிறேன். கடவுள் என்னை தண்டித்துவிட்டார். ஆனால் நான் இழந்ததுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என தெரிவித்துள்ளார்.

கெரியரை பொறுத்தவரை யாஷிகா கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். தற்போதைக்கு அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்பதால் யாஷிகாவுக்கு பதில் வேறு நடிகைகளை நடிக்க வைக்க இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் முடிவு செய்திருக்கிறார்கள்.

சாரி பவானி, உயிரோட இருப்பதே குற்ற உணர்ச்சியா இருக்கு: யாஷிகாஇதற்கிடையே தன் தோழி பவானியை மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளத்தில் உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார் யாஷிகா.