நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துவருமான யாஷிகா ஆனந்த், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.
நடிகை யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த கார் விபத்தில் தனது நெருங்கிய தோழியை பறிகொடுத்ததோடு, அவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக தான் அவர் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார் .
இந்த நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதான் செட்டில் ஆவதற்கு சரியான நேரம். ஆனால் அதே நேரத்தில் எனக்கு சினிமா பிடிக்கும் என்பதால் தொடர்ந்து சினிமாவில் நடித்து உங்களை மகிழ்விப்பேன்.
மேலும் எனக்கு லவ் செட் ஆகாது, எனவே இந்த திருமணம் பெற்றோர் நிச்சயித்த திருமணம், உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எனக்கு தேவை என்று தெரிவித்துள்ளார். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று யாஷிகா கூறியிருப்பதால் மாப்பிள்ளை சினிமா துறையைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.