வலுவான் மிடில் ஆர்டர்: அய்டன் மார்க்ரம், டெவன் கான்வே, மிட்செல் மார்ஷ். இவருக்கு அடுத இடத்தில் நம்பர் 7-ல் ஷாகிப் அல் ஹசன். 8ம் இடத்தில் இலங்கையின் வைனிந்து ஹசரங்கா, இதற்கு அடுத்து முஸ்தபிசுர் ரஹ்மான், ட்ரெண்ட் போல்ட், ஜோஷ் ஹாசில்வுட்.
ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து): ஜாஸ் பட்லர் எந்த வடிவமாயினும் அதிரடி வீரர்தான். இவர் டி20 உலகக்கோப்பை 2021-ல் தொடரின் ஒரே சதத்தை இலங்கைக்கு எதிராக எடுத்தார். 101 ரன்களை 67 பந்துகள் எடுத்தார். இதில் முதல் 50 ரன்கள் 45 பந்துகளில் எடுத்தார் ஜாஸ் பட்லர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக பிரமாதமாக ஆடினார். மொத்தமாக 14 போட்டிகளில் 589 ரன்கள் எடுத்துள்ளார் பட்லர். சராசரி பிரமாதமான 64. ஸ்ட்ரைக் ரேட் 140+.
முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – இவரைப்பற்றி அதிகம் சொல்லியாகிவிட்டது, ஆண்டின் சிறந்த டி20 வீரர், 2000 ரன்கள் மைல்கல்லை ஒரு காலண்டர் இயரில் எடுத்துள்ளார். இந்த ஆண்டு செம ஆண்டாக ரிஸ்வானுக்கு அமைந்துள்ளது.
பாபர் ஆசம்: விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவுக்கு பேட்டிங் திறமை மட்டுமல்ல கேப்டன்சியிலும் திறமை காட்டி வருகிறார், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், டி20 உலகக்கோப்பைக்கு முன்னரே பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாபவே அணிகளை உள்ளேயும் வெளியேயும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸை உள்ளேயும் வீழ்த்தினர் வெளியேயும் வீழ்த்தினர். 26 ஆட்டத்தில் 853 ரன்களை எடுத்துள்ளார் பாபர் ஆசம்.
அய்டன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா): இவரது ஸ்ட்ரைக் ரேட் 150 பக்கம். தொடக்க வீரர்களை விரைவில் இழந்தால் 4ம் நிலையில் திடப்படுத்துபவர் அய்டன் மார்க்ரம். 2021-ல் 16 இன்னிங்ஸில் 570 ரன்கள்.
டெவன் கான்வே (நியூசிலாந்து) – 3 வடிவங்களிலும் பிரமாதமான ஒரு வீரர், நேராக ஆடக்கூடியவர், அதிரடியாக ஆடக்கூடியவர், டெஸ்ட் போட்டிகள் என்று வந்தால் நின்று இரட்டைச் சதம் எடுப்பவர். அறிமுக டெஸ்ட்டில் இங்கிலாந்துடன் இரட்டைச் சதம் எடுத்த டெவன் கான்வே, தன் அறிமுக டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 99 ரன்களை எடுத்து துரதிர்ஷ்டவசமாக சதத்தை இழந்தார். இந்த ஆண்டு 13 இன்னிங்சில் 428 ரன்கள் எடுத்துள்ளார்.
மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா): டி20 உலகக்கோப்பை 2021-இறுதியில் நியூசிலாந்து பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 77 ரன்கள் விளாசியதை மறக்க முடியுமா? 2021-ல் 627 ரன்களை 130 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார் மிட்செல் மார்ஷ்.
ஷாகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்): இவர் 2021-ல் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் கடைசில் அபாய வீரர், பவுலிங்கில் 18 கேம்களில் 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். நம்பத்தகுந்த வீரர்.
வைனிந்து ஹசரங்கா (இலங்கை), இவர் நம்பர் 1 டி20 பவுலர். காலண்டர் ஆண்டில் 36 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிக்கன விகிதம் ஓவருக்கு 6க்கும் கீழ். ஐசிசி டி20 உலகக்கோப்பையில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நம்பர் 8-0ல் நல்ல பேட்டர்.
முஸ்தபிசுர் ரஹ்மான் (வங்கதேசம்)- அருமையான கட்டர் பவுலர், லெக் கட்டர், ஆஃப் கட்டர் என்று அசத்துவார். ஆண்டில் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிக்கன விகிதம் ஒரு ஓவருக்கு 7 ரன்கள்தான். ஸ்லோ யார்க்கர்களையும் நன்றாக வீசுகிறார்.
ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து) – இவரைப் பற்றி கூற வேண்டியதேயில்லை ஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ஆடி அசத்தலாக வீசினார். இந்த ஆண்டு 15 போட்டிகளில் 23 விக்கெட்டுகள்.
ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா)- 2021-ல் 15 போட்டிகளில் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஐபிஎல் தொடரில் தோனி எப்போதெல்லாம் விக்கெட் விழ வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போது ஜோஷ் ஹேசில்வுட்டிடம்தான் கொடுத்தார். உண்மையில் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு டி20 பவுலர், ஆனால் உண்மையில் விக்கெட் டேக்கிங் பவுலர்.
ஆகவே இதுதான் நியூஸ் 18 கிரிக்கெட் நெக்ஸ்ட் ஆண்டின் சிறந்த டி20 அணி.
Observe @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Observe @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube