Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    கேஃபடீரியா ஊழியருக்கு பள்ளி மாணவர்கள் அளித்த அன்புப் பரிசு!

    makeflow.mks@gmail.comBy [email protected]21/12/2021No Comments2 Mins Read

    ‘சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு’ – இந்த பாடல் வரி முழுக்க முழுக்க உண்மை என்பதை அவ்வபோது உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் மூலம் நமக்கு உணர்த்துகிறது. கையளவு தான் உலகம் என்று உலகம் முழுவதும் இணையத்தால் இணைக்கப்பட்ட சூழலில், எந்த ஊரில், எந்த நாட்டில் இது போன்ற அற்புதமான நிகழ்வு நடந்தாலும் உடனே நமக்கு தெரிந்துவிடும். மேலும், சமீபகாலமாக எல்லா இடங்களிலும் கொரானா பாதிப்பு, தனிப்பட்ட பிரச்சனைகள், வேலையின்மை, உள்ளிட்ட எதிர்மறையான விஷயங்கள் இன்றைய வாழ்க்கையை கடினமான சூழலாக மாற்றியுள்ளது.அத்தகைய தருணங்களில், இதைப்போன்ற அன்பை வெளிப்படுத்தும் சின்ன சின்ன செயல்கள் மனதை நெகிழ்வாக உணரச் செய்து, மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த உலகத்தையே அன்பால் மாற்ற முடியும் என்று பள்ளி மாணவர்கள் உணர்த்தியுள்ளனர்.

    பிரேசில் நாட்டில் இருக்கும் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருக்கும் ஒரு கேஃடேரியா ஊழியருக்கு, அவருடைய கடின உழைப்புக்கும் மற்றும் அவர் அன்புக்கும் நன்றி செலுத்தும் விதமாக பரிசுகளை வழங்கியுள்ளனர். பரிசுகளைப் பெற்ற அந்த பெண்மணி கண்கலங்கி நிகழ்வது பார்ப்பவர்களையும் கண்கலங்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது டிவிட்டரில் வைரலாகப் பரவி வருகிறது.

    மாணவிகள் ஒரு கிளாஸ்ரூமுக்குள் செல்கிறார்கள். அங்கு அந்த ஊழியரும் இருக்கிறார். மாணவிகள் ஒரு ஊழியரை சுற்றி நிற்கிறார்கள். மற்றொரு மாணவி அந்த ஊழியரின் கண்களை மூடிக் கொள்கிறார். சில நொடிகளுக்குப் பிறகு மற்றொரு மாணவி கையில் ஒரு அழகான பரிசுக் கூடையுடன் வகுப்பறைக்குள் நுழைகிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நெருங்கி வரும் தருணத்தில், இதைப் போன்ற பரிசுக் கூடைகளை அளிப்பது பல நாடுகளில் வழக்கம்.

    தங்களை அன்போடும் கனிவோடும் கவனித்துக் கொண்ட கேஃப் ஊழியருக்கு தங்களின் நன்றியை தெரிவிக்க மாணவிகள் ஒரு அழகான பரிசக் கூடையை சர்ப்ரைசாக வழங்கியுள்ளனர். மாணவிகள் இணைந்து அந்த ஊழியருக்கு பரிசை வழங்குகிறார்கள். அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் நெகிழ்ந்து போன அந்த பெண்மணி கண்கள் கலங்கி மகிழ்ச்சியில் திளைத்து அனைவரையும் அனைத்துக் கொள்கிறார். இந்த உலகத்தையே அன்பால் மாற்றலாம் என்று குட் நியூஸ் கரஸ்பாண்டன்ட் டிவிட்டர் கணக்கில் வீடியோ பகிரப்பட்டது.

    LET’S CHANGE THE WORLD WITH KINDNESS! Crew of scholars in Brazil marvel their cafeteria employee in class with a present basket in appreciation of her exhausting paintings & kindness. ❤😭❤
    pic.twitter.com/FsDjpQyL45


    — GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) December 14, 2021

    இந்த வீடியோவை தற்போது வரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இது போன்ற மனிதர்கள் உலகில் இருக்க வேண்டும் அப்போதுதான் மனித நேயம் தொடர்ந்து இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும் என்று நெட்டிசன்கள் கமென்ட் தெரிவித்து வருகின்றனர்.

    Additionally learn… சேற்றில் சிக்கிய வாகனத்தை பொம்மை ட்ராக்ட்டர் கொண்டு இழுக்கும் குழந்தை – ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ!

    ஒரு நண்பர்கள் குழு, சிறு வயதில் தங்கள் பள்ளியில் ஐஸ் வண்டி விற்பனை செய்து வந்த முதியவரைக் கண்டறிந்து, அவருக்கு உதவும் வகையில் அவருக்கு ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொடுத்த சம்பவமும் தமிழ்நாட்டில் நடந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

    Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Smart Order Routing: Crucial For Crypto Execution
    • Online-pelaamisen tulevaisuus ja sen haasteet
    • #157 – Katie Keith on the Move From Agency Owner to WordPress Theme Development to Plugin Success
    • #156 – Derek Ashauer on Analytics Options and Privacy Challenges
    • #155 – Anthony Jackson on Trying to Figure Out His Way in the Tech World
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2025 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.