Lucknow
oi-Rajkumar R
லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், தனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி, சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் மக்களை சந்தித்து ஆதரவை இப்போதிருந்தே திரட்டி வருகிறனர்.
இந்நிலையில் தான் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும், முன்னாள் எம்பியுமான டிம்பிள் யாதவ், தனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
அகிலேஷின் மனைவி டிம்பிள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது, அதன் அறிக்கை நேர்மறையானது. நான் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டேன், எந்த அறிகுறியும் காட்டவில்லை. எனக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பிற்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்” என்று டிம்பிள் யாதவ் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
டிம்பிள் யாதவ் தான் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டபோதும் தனது கொரோனா பரிசோதனை செய்தபோதும், தனக்கு தொற்று பாதித்து இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன் பாதுகாப்புக்காகவும், தன்னை சுற்றியிருப்பவர்களின் பாதுகாப்புக்காகவும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் பிரச்சாரம்
டிம்பிள் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கணவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தடுப்பூசி போட்டுகொண்டாரா என்பது தெரியவில்லை. அவரது தந்தையான முலாயம் சிங் யாதவ் தான் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்வதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. உ.பி., சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அகிலேஷ் யாதவ், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவரும் தன்னை பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்புள்ள நிலையில்,வரும், ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் நாளை அலிகாரில் நடைபெறும் கூட்டுப் பேரணியில் கலந்து கொண்டு பேச உள்ள நிலையில் தான் டிம்பிள்யாதவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து
இந்த ஆண்டு ஜனவரியில், அகிலேஷ் யாதவ் தனக்கு “பாஜக தடுப்பூசி” போட்டுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியிருந்தார், இது ஆளும் கட்சித் தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதற்கு விளக்கமளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், “தடுப்பூசியை உருவாக்கும் எந்த விஞ்ஞானி அல்லது தடுப்பூசி தயாரிப்பதில் உதவிய எந்த நபர் குறித்தும் நான் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. பாஜக எடுத்த முடிவுகளால் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் நான் கேள்விகளை எழுப்பினேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English abstract
Dimple Yadav, the spouse of Samajwadi Celebration chief Akhilesh Yadav, has stated on her Twitter web page that she has been showed to be inflamed with covid-19 and has remoted herself.