Delhi
oi-Vigneshkumar
டெல்லி: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் அடுத்த கொரோனா அலை எப்போது ஏற்படும், அது எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த உலகை ஓமிக்ரான் அப்படிப் புரட்டிப்போட்டுவிட்டது என்றே கூற வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் உலகெங்கும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
‘வார் ரூம்கள்’ தேவை.. 3 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. மீண்டும் ஊரடங்கு? மத்திய அரசு பரபர கடிதம்
கொரோனா பரவல் எப்படி இருக்கலாம் என்பதை பல்வேறு ஆய்வாளர்கள் டிராக் செய்து வருகின்றனர். அப்படி Sutra modelஐ பின்பற்றி ஐஐடி கான்பூரின் மனீந்த்ரா அகர்வால் மற்றும் ஐஐடி ஹைதராபாத் ஐஐடியின் எம் வித்யாசாகர் ஆகியோர் கொரோனா பரவலை டிராக் செய்து வருகின்றனர்.
பிப்ரவரி மாதம்
ஓமிக்ரான் பரவலால் இந்தியாவில் வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து இவர்கள் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். மிக மோசமான சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் பிப்ரவரி மாதம் தினசரி புதிய கேஸ்கள் 1.5 முதல் 1.8 லட்சம் வரை செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேக்சின் அல்லது இயற்கையாக உருவான நோய் எதிர்ப்பு ஆற்றலில் இருந்து புதிய ஓமிக்ரான் கொரோனா முழுமையாகத் தப்பும்பட்சத்தில் இந்தளவு மோசமான பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில் நடப்பத்தை வைத்துப் பார்க்கும் போது, புதிய ஓமிக்ரான் வைரஸ் மின்னல் வேகத்தில் பரவுகிறது. அதேநேரம் வைரஸ் பரவல் வேகம் உச்சத்தில் இருந்து விழுவதும் அதே அளவுக்கு வேகமாக உள்ளது. தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை மூன்று வாரங்களில் கேஸ்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது. ஆனால், அதன் பிறகு ஏற்கனவே வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கிவிட்டது. அங்கு இப்போது தினசரி கேஸ்கள் 20 ஆயிரம் என்று குறைந்துள்ளது.
எச்சரிக்கை தேவை
ஒமிக்ரான் பாதிப்பு என்பது இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்டதைப் போலவே இருக்கும் என ஐஐடி பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நாம் நம்பிக்கையுடன் அதேநேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் ஓமிக்ரான் கொரோனா நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து எந்தளவுக்குத் தப்பும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அனைத்து விஷயங்களையும் வைத்துப் பார்க்கும் போது, ஓமிக்ரான் கொரோனாவால் பிப்ரவரி மாதம் அடுத்த அலை உச்சம் தொடும் என்றும் இருப்பினும் அதன் பிறகு விரைவிலேயே வைரஸ் பாதிப்பு குறையும் என்றும் ஐஐடி பேராசிரியர்கள் எச்சரித்துள்ளனர்,
பிரிட்டன்
மற்ற வெளிநாடுகளைப் பார்க்கும் போது பிரிட்டன் நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு, தற்போது 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 129 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 14 பேர் உயிரிழந்துவிட்டனர். பிரிட்டன் நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் மட்டும் அங்கு வைரஸ் பாதிப்பு 61% வரை அதிகரித்துள்ளது. அதேநேரம் உயிரிழப்புகள் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. பிரிட்டன் நாட்டில் ஜனவரி முதல் வாரத்தில் ஓமிக்ரான் உச்சம் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவிலும் தினசரி வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அங்கு டிச. 20ஆம் தேதி மட்டும் 1.4 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் பரவல் இப்போது தான் அங்குத் தொடங்கியுள்ளதால் வரும் காலங்களில் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அதாவது வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் ஓமிக்ரான் வைரசால் அடுத்த அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English abstract
Amild new Covid wave would possibly hit India in February 2022, estimate two scientists at the back of the a lot mentioned Sutra type of monitoring the pandemic trajectory within the nation.