Delhi
oi-Shyamsundar I
டெல்லி: இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்ய உள்ளார். இதனால் இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் வருமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. டெல்லியில் 57 பேருக்கும், மகாராஷ்டிராவில் 54 பேருக்கும் இதுவரை ஓமிக்ரான் கேஸ்கள் ஏற்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருகின்றன.
கொடநாடு கொலை : சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸ்
இந்த நிலையில் ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், லாக்டவுன் குறித்தும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்ய உள்ளார்.
இந்தியா ஓமிக்ரான்
கொரோனா பரவல் தொடர்பாக உயர் அதிகாரிகள், சுகாதார செயலாளர்களுடன் மோடி பேச உள்ளார். மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார். இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் எந்த அளவில் இருக்கிறது, எந்தெந்த மாநிலங்களில் கேஸ்கள் அதிகம் இருக்கிறது என்று அவர் பிரதமர் மோடிக்கு விளக்குவார்.
ஓமிக்ரான் பிரதமர் மோடி
நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியாவில் போடப்பட்ட வேக்சின் அளவு, அதேபோல் பூஸ்டர் தேவையா என்பது குறித்து இவர் பிரதமருக்கு விளக்கம் அளிப்பார். இன்னும் பல மருத்துவத்துறை நிபுணர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர் .
பிரதமர் மோடி லாக்டவுன்
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் வந்துள்ளன. அதேபோல் தேவைப்படும் பட்சத்தில் இரவு நேர லாக்டவுன் கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா லாக்டவுன்
இந்த நிலையில்தான் தற்போது பிரதமர் மோடி தலைமையிலான கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு பின்பாக இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம். இரவு நேர லாக்டவுன், சில பொது இடங்களுக்கு செல்ல தடை, பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன. முழு அளவில் லாக்டவுன் அறிவிப்பு வர வாய்ப்பு குறைவு என்றாலும் மாநில வாரியாக நிறைய கட்டுப்பாடுகள் வரும் என்று கூறப்படுகிறது.
English abstract
Coronavirus; PM Modi to speak about lockdown and Omicron variant instances in India nowadays in an upper officers assembly.
Tale first printed: Thursday, December 23, 2021, 7:15 [IST]