New York
oi-Shyamsundar I
நியூயார்க்: நியூயார்க்கில் பூஸ்டர் கொரோனா டோஸ் போடும் மக்களுக்கு பணம் அளிக்கப்படும் என்று சிட்டி மேயர் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் பரவல் காரணமாக அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 178,888 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு தினசரி கேஸ்களில் 73 சதவிகித கேஸ்கள் ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும்.
‘வார் ரூம்கள்’ தேவை.. 3 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. மீண்டும் ஊரடங்கு? மத்திய அரசு பரபர கடிதம்
அமெரிக்காவில் மொத்தமாக 52,249,823 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 830,976 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1979 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 40,791,721 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 10,627,126 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
நியூயார்க்
முக்கியமாக நியூயார்க்கில் தினசரி கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது. அங்கு தினசரி கேஸ்கள் 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நியூயார்க்கில் இதுவரை 3,107,454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு திடீரென தினசரி கேஸ்கள் அதிகரித்து இருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓமிக்ரான் கொரோனா பரவல் காரணமாக இப்படி கேஸ்கள் அதிகரிக்கிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும் எழுந்துள்ளது.
பூஸ்டர்
இந்த நிலையில்தான் நியூயார்க்கில் மக்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓமிக்ரான் பரவலை தடுக்க பூஸ்டர் மட்டுமே ஒரே வழி என்று பல நாட்டு மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நியூயார்க்கில் பூஸ்டர் டோஸ் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் நியூயார்க்கில் பூஸ்டர் போடும் நபர்களுக்கு 100 டாலர் வழங்கப்படும் என்று நியூயார்க் சிட்டி மேயர் பில் டே பால்சியோ தெரிவித்துள்ளார்.
நியூயார்க் பூஸ்டர்
அதாவது இந்திய மதிப்பில் பூஸ்டர் டோஸ் போடும் நபர்களுக்கு 7500 ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. அங்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வந்தாலும் மக்கள் சிலர் இரண்டு டோஸ் போட்டுவிட்டதால் பூஸ்டர் போடுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இது ஒருவேளை ஓமிக்ரான் பரவலை உண்டாக்கும் வாய்ப்புகள் உள்ளன. பூஸ்டர் போடுவதில் மக்கள் அலட்சியம் காட்டி வருகிறார்கள்.
பூஸ்டர் 100 டாலர்
இதன் காரணமாக மக்களை பூஸ்டர் போட வைக்கும் வகையில் 100 டாலர் வழங்கப்படுகிறது. ஏற்கனவே முதல் டோஸ் போட்டவர்களுக்கு இப்படி 100 டாலர் அங்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்பதால் பூஸ்டர் டோஸ் போடும் நபர்களுக்கும் 100 டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English abstract
Coronavirus; The big apple town to present 100 buck for everybody whoever taking booster doses to keep away from Omicron unfold.