Lucknow
oi-Vigneshkumar
லக்னோ: நாடு முழுவதும் ஓமிக்ரான் கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தேர்தலை ஒத்திவைக்குமாறு பிரதமர் & தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் ஐகோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என வியூகம் அமைத்து அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேபோல பிரதமர் மோடியே உத்தரப் பிரதேசத்திற்குக் கடந்த சில வாரங்களில் பல முறை சென்று, பல முக்கிய நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
அதேபோல உபி-இல் சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரசும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களிலும் கூட தேர்தல் பணிகள் மெல்லச் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கோவாவில் காங்கிரஸ் ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.
இந்தச் சூழ்நிலையில், ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதால் தேர்தலை ஒத்திவைக்க அலகாபாத் ஐகோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஓமிக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வரவிருக்கும் தேர்தலை ஒத்திவைக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் அரசியல் பேரணிகள், கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சேகர் யாதவ் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும் நாட்டு மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கும் பிரச்சாரத்தைக் கையிலெடுத்த பிரதமர் மோடியின் முயற்சிகளையும் நீதிமன்றம் பாராட்டியது.
அதிகரிக்கும் ஓமிக்ரான்: எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டிய நேரம்.. பிரதமர் மோடி பேச்சு
English abstract
Allahabad Top Court docket nowadays prompt the High Minister of India, Narendra Modi to put off the impending elections in view of the emerging danger of Omiron.