Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Sports

    கடந்த ஆண்டின் மோசமான ஆட்டத்திலிருந்து மீளுமா தமிழ் தலைவாஸ்? – News18 Tamil

    makeflow.mks@gmail.comBy [email protected]22/12/2021No Comments2 Mins Read

    புரோ கபடி லீக் தொடர் இன்று துவங்குகிறது இதில் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி சந்திக்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 8:30 மணிக்கு நடைபெறுகிறது. இடம்: பெங்களூரு.இன்று மூன்று போட்டிகள் நடக்கவுள்ளன. முதல் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. மற்ற இரு போட்டிகளில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (ஐதராபாத்), பெங்கால்-உ.பி., அணிகள் விளையாடுகின்றன.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், புரோ கபடி லீக் (பி.கே.எல்.,) 8வது சீசன் இன்று துவங்குகிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ பெங்கால், தமிழ் தலைவாஸ், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. 12 அணிகளில் இருந்து, 190க்கும் மேற்பட்ட வீரர்கள் ரூ. 48.22 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உ.பி., அணி சார்பில் நார்வல், அதிகபட்சமாக ரூ. 1.65 கோடிக்கு ஒப்பந்தமானார்.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். அடுத்த நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘எலிமினேட்டர்’ போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இன்று மோதும் தமிழ்தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இரண்டுமே கடந்த முறை மோசமாக ஆடின. தெலுங்கு டைட்டன்ஸ் அணி கடந்த புரோ கபடி லீக் போட்டிகளில் 11வது இடத்தில் முடிந்தது. 6-ல் வென்று 13-ல் தோற்றது. தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 15 தோல்விகள் என்று பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.

    எனவே இரு அணிகளுமே வெற்றியுடன் தொடங்க நிச்சயம் கடுமையாகப் போராடி ஆடும். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் ரோகித் குமார் மற்றும் பாகுபலி சித்தார்த் ஏறி விளையாடும் ரெய்டர்களில் ஆக்ரோஷமானவர்கள்.

    தெலுங்கு டைட்டன்ஸ் விளையாடும் 7 வீரர்கள்: சித்தார்த் தேசாய், ரோகித் குமார், ரஜ்னீஷ், அமித் சவுகான், சி.அருண், சுரீந்தர் சிங், ருதுராஜ் கொராவி

    தமிழ் தலைவாஸ் அணி: கே.பிரபஞ்சன், அதுல் எம்.எஸ், மஞ்ஜீத், சாகர் பி கிருஷ்ணா, சந்தபனசெல்வம், சுர்ஜீத் சிங், எம்.அபிஷேக் சாகர்

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் லைவ் ஆக இந்தப் போட்டிகள் ஒளிபரப்பப்படுகிறது.

    Observe @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Observe @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    Ravi Shastri answers some gruelling questions, கோச்களிலே சிறந்த கோச் நான் தான்- தற்பெருமையின் உச்சத்தில் ரவி சாஸ்திரி – News18 Tamil

    24/12/2021

    cricket news in tamil: IND vs SA: ‘இவருக்கு பந்துபோடுறது’…ரொம்ப கஷ்டம்: சமாளிக்க போராடுவேன்: தென்னாப்பிரிக்க பௌலர் பளிச்! – bowling to virat kohli will be tough but exciting too says duanne olivier

    24/12/2021

    புரோ கபடி 2021 : பெங்களூரை வீழ்த்தி மீண்டு எழுமா தமிழ் தலைவாஸ்?

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • #179 – Mariya Moeva on the Impact of Google’s SiteKit on WordPress
    • The FAIR Package Manager Just Launched as a WordPress Repository Alternative – but What Exactly Is It?
    • I Tried Hostinger’s New Horizons AI Developer Tool: Is the Hype Justified?
    • Google Just Released an Avalanche of New AI Tools…Here’s the Breakdown
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.