ஹீரோ’ படத்துக்குப் பிறகு ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிவகார்த்திகேயன் பிறந்த நாளான பிப்ரவரி 17-ம் தேதி, ‘டாக்டர்’ படத்தின் டீஸர் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், ‘டாக்டர்’ வெளியீட்டுத் தேதி குறித்து எதுவுமே தெரியாமல் இருந்தது. தற்போது மார்ச் 26-ம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது ‘டாக்டர்’, ‘அயலான்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டதால், ‘டான்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன்.
‘டாக்டர்’ படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.