தென் கொரியாவில் வசித்து வரும் அலினா வெளிநாட்டைச் சேர்ந்தவர். இவர் வழக்கம் போல ஒரு டிக்டாக் வீடியோவைப் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த வீடியோவை பதிவு செய்து கொண்டிருக்கும் போதே, அவருடைய வீட்டை உடைத்து ஒரு திருடன் உள்ளே நுழைய முயற்சி செய்வதைக் கண்டறிந்துள்ளார். அலினா வீடியோ எடுத்து அப்லோடு செய்து கொண்டிருக்கும் போதே யாரோ அவருடைய கதவை தட்டிக் கொண்டே இருக்கும் சத்தமும் கதவை உடைக்கும் சத்தமும் கேட்டிருக்கிறது.
டிக்டாக்கில் பதிவேற்றிய வீடியோ கிளிப் 11 நொடிகள் தான் என்றாலும், திருடனின் வீட்டை உடைக்க முயற்சி செய்வதை அறிந்த அவர் பயந்து போய் இருக்கிறார் என்பது அவரின் முக பாவனையில் இருந்து தெரிகிறது. பெண்கள் எங்கேயும் பயமின்றி நிம்மதியாக வாழ முடியாதா என்று கேப்ஷன் இந்த வீடியோவை அலினா டிக்டாக் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
கிட்டத்தட்ட 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் வீடியோவைப் பகிர்ந்து கமெண்ட்டுகள் தெரிவித்தும் வருகின்றனர். அலினா பகிர்ந்த அச்சுறுத்தக்கூடிய இந்த வீடியோ மற்ற பெண்களையும் தாங்கள் எதிர்கொண்ட இதேபோன்ற தருணங்களை பகிர வைத்துள்ளது.
“இதே போல எனக்கும் நடந்துள்ளது. நான் தூங்கிக் கொண்டிருந்த போது, யாரோ ஒரு ஸ்ட்ரேஞ்சர் என்னுடைய அபார்ட்மென்ட்டுக்குள் வந்துவிட்டார். “பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. கதவில் கீபேட் லாக் மற்றும் உங்கள் ஃபிங்கர் ஃபிரின்ட் இருந்தால் தான் திறக்க முடியும் என்ற அமைப்பைப் பொறுத்திக் கொள்ளுங்கள். போலீசைக் கூப்பிடுங்கள்” என்று ஒரு பெண் கமென்ட் செய்துள்ளார்.
“யாரது, நான் போலீசுக்கு கால் பண்ணிட்டேன்” என்று உங்கள் ஆண் நண்பர்களில் யாரேனும் ஒருவரைக் குரல் பதிவு செய்து வைத்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும். இதைப் போன்ற சூழலில் கூடுதல் பாதுகாப்பாக எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Practice @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Practice @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube