Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Button
    FH Edits
    T Trends

    டிவிட்டர் இந்தியா 2021 – இந்த ஆண்டில் வைரலான டிவீட்கள் என்னென்ன?

    makeflow.mks@gmail.comBy [email protected]24/12/2021No Comments3 Mins Read

    ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் எதைப் பற்றிய செய்திகள் அதிகமாக பகிரப்பட்டது, எதைப் பற்றி மக்கள் அதிகமாக பேசியிருக்கிறார்கள் என்பது பற்றிய அறிக்கைகளை அந்தந்த நிறுவனம் வெளியிடும். இரு நாட்களுக்கு முன்பும் அதிகமாக தேடப்பட்ட தகவல் பற்றி கூகுள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, மைக்ரோபிளாகிங் தளமான டிவிட்டர் தனது ஆண்டு அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் மிகவும் வைரலான டிவீட்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது.2021 ஆம் ஆண்டில் அதிகமாக டிவீட் செய்யப்பட்ட பதிவுகள் எவை என்று இங்கே பார்க்கலாம்.

    அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்விட்: இந்தியாவுக்கு கோவிட் நிவாரண நிதி அளித்த பேட் கம்மின்ஸ்

     

    pic.twitter.com/2TPkMmdWDE


    — Pat Cummins (@patcummins30) April 26, 2021

     

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு கோவிட் நிவாரண நிதியாக கணிசமான தொகையை அளித்து, அதைப் பற்றி உருக்கமான செய்தியை டிவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த டிவீட் உலகம் முழுவதிலும் வைரலாக ரீட்வீட் செய்யப்பட்டது.

    அதிகமாக லைக் செய்யப்பட்ட டிவீட்: விருக்ஷாவின் முதல் குழந்தை

     

    ♥️ pic.twitter.com/js3SkZJTsH


    — Virat Kohli (@imVkohli) January 11, 2021

     

    நட்சத்திர ஜோடி அனுஷ்கா மற்றும் விராட் கோலி வெற்றிகரமான பாலிவுட்-கிரிக்கெட் ஜோடியாக வலம் வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தங்கள் முதல் குழந்தை பிறந்ததைப் பற்றிய பதிவு வைரலாக பரவி, அதிகமாக லைக் செய்யப்பட்ட டிவீட்டாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

    அனுஷ்கா சர்மா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த டிவீட் 2020 ஆம் ஆண்டும் அதிகமாக லைக் செய்யப்பட்ட டிவீட் என்பதும் குறிப்பிடத்தக்கது

    இந்தியாவின் மிகவும் பிரபலமான டிவீட்டுகள்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முதல் டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டுகொண்ட போது பகிர்ந்த புகைப்படம், இந்த ஆண்டின் பிரபலமான டிவீட்.

     

    Took my first dose of the COVID-19 vaccine at AIIMS.


    Exceptional how our docs and scientists have labored in fast time to make stronger the worldwide combat in opposition to COVID-19.

    I attraction to all those that are eligible to take the vaccine. In combination, allow us to make India COVID-19 loose! pic.twitter.com/5z5cvAoMrv

    — Narendra Modi (@narendramodi) March 1, 2021

     

    அது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றதற்காக இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டி வெளியிட்ட பதிவும் மிகவும் வைரலாக பரவியது. டாடா நிறுவனத் தலைவரான ரத்தன் டாடா தன்னுடைய நிறுவனங்களில் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை இணைத்த போது, அதை வரவேற்று “Welcome Again Air India” என்று பகிர்ந்த டிவீட் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது. பிசினஸ் கேட்டகிரியில் அதிகமாக ரீட்வீட் செயப்பட்ட, அதிகமான கான்வர்சேஷன் உருவாக்கிய பதிவாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

     

    Welcome again, Air India 🛬🏠 pic.twitter.com/euIREDIzkV


    — Ratan N. Tata (@RNTata2000) October 8, 2021

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி லட்சக்கணக்கான லைக்குகளைப் பெற்றது

     

    #Beast pic.twitter.com/VgMlmH1Gno


    — Vijay (@actorvijay) June 21, 2021

    கோவிட் பாதிப்பு தாக்கம் தொடங்கியதிலிருந்தே, டிவிட்டர் மிகவும் முக்கியமான தகவல் பரிமாற்ற தளமாக மாறிவிட்டது. அனைத்து அதிகாரபூர்வமான செய்திகளுமே ட்விட்டரில் முதலில் பகிரப்படும் அளவுக்கு அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி ரியல் டைம் ஹெல்ப்லைன் என்ற அடிப்படையில் சரியான நேரத்தில் தேவையான தகவலை வழங்கும் உதவி மையமாகவும் டிவிட்டர் செயல்பட்டது. கிரிக்கெட், விவசாயிகள் போராட்டம், டோக்கியோ ஒலிம்பிக்ஸ், ஐபிஎல், தீபாவளி, பிட்காயின் ஆகியவை இந்தியர்களால் அதிகமாக பகிரப்பட்ட செய்திகளாக டிவிட்டர் தெரிவித்திருக்கிறது.

    செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Smart Order Routing: Crucial For Crypto Execution
    • Online-pelaamisen tulevaisuus ja sen haasteet
    • Web App Vs Website: Key Differences Explained
    • Leo Movie Tamil 2024 Full Movie HD Download
    • Finest Crypto Indicators For Profitable Trading Methods
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2025 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.