Chennai
oi-Vigneshkumar
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாநிலம் முழுவதும் 602 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நான்கு மாவட்டங்களில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
தமிழ்நாட்டில் கொரோனா வேக்சின் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதன் காரணமாக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கில் பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வைரஸ் பாதிப்புகள் குறைந்து வந்தாலும் கூட, ஓமிக்ரான் அச்சம் காரணமாக மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு இப்போது கொரோனா தடுப்பூசி கிடையாது.. மத்திய அரசு கூறிவிட்டது.. நிபுணர் தகவல்!
தினசரி கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவர், கர்நாடகாவில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 602 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 27,41,013 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பாசிட்டிவ் விகிதம்
மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6percentஆக உள்ளது. திருப்பூர் மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் அதிகபட்சமாக 1.2percentஆகவும் செங்கல்பட்டு மற்றும் நாமக்கல்லில் பாசிட்டிவ் விகிதம் 1.1percentஆக உள்ளது. சென்னையில் 132 பேருக்கும் கோவையில் 95 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஈரோட்டில் 50 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தாண்டி வேறு மாநிலங்களில் எங்கும் 50க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. மயிலாடுதுறை, நாகை, தென்காசி, தேனி மாவட்டங்களில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
உயிரிழப்பு
அதேபோல தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். கோவையில் 2 பேரும் ஈரோடு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தல ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,691 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
வேகமெடுக்கும் ஒமிக்ரான் பரவல்… 27.57 கோடியை தாண்டிய பாசிட்டிவ் கேஸ்கள்!
ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல புதிய வைரஸ் பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் குறைகிறது. நேற்று 7,172ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 7,078ஆகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 691 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,97,244 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.
English abstract
Tamilnadu Corona instances newest updates in Tamil. 4 districts report 0 instances.
Tale first printed: Tuesday, December 21, 2021, 23:04 [IST]