Chennai
oi-Jeyalakshmi C
சென்னை: தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நேற்று மாலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில் கொரோனா பாதிப்பு 607ஆக உள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 27,42,224 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6p.cஆக உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான், இப்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.
டெல்டா அலை உச்சத்தை விட 3 மடங்கு அதிகரிக்கும் ஓமிக்ரான் – அமெரிக்க பல்கலைக்கழகம் கணிப்பு
34 பேர் பாதிப்பு
உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மேலும் 24 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளதால் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் ஓமிக்ரான்
இந்திய அளவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.
ஓமிக்ரான் பரவல் மேலும் அதிகரிக்காத வகையில் அதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று
இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதார்.
ஆலோசனைக் கூட்டம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
என்னென்ன கட்டுப்பாடுகள்
ஓமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ளலாம்? புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? பள்ளி கல்லூரி மாணவர்களிடையே ஓமிக்ரான் பரவாமல் தடுப்பதற்கு அறிவிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் ஆகியவை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளநிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் புதிய முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசு கடிதம்
இந்திய அளவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஓமிக்ரான் கொரோனை கட்டுப்படுத்த வார் ரூம்களை ஏற்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தீவிர கொரோனா பரிசோதனை, இரவு ஊரடங்கு உள்ளிட்ட தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English abstract
Leader Minister MK Stalin is conserving consultations on the Basic Secretariat lately because the unfold of Omicron in Tamil Nadu is expanding. Crucial announcement is predicted lately in regards to the pointers to be adopted within the party of Christmas and New 12 months.
Tale first revealed: Friday, December 24, 2021, 7:45 [IST]