Chennai
oi-Rajkumar R
சென்னை: சிறுபான்மை மக்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழர்கள் என்ற உணர்வோடு அனைவரும் இங்கு கூடி இருப்பதாகவும் ஒரு வயிற்றில் இடம் போதாது என்பதால் தனித்தனி வயிற்றில் பிறந்த ஒரே பிள்ளைகள் நாம் என்றும், அனைவருடன் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மதங்கள் கூறும் சாராம்சமாக உள்ளது என்றும், அனைத்து மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன என கூறினார்.
பறந்து வந்து பஸ் மீது மோதிய கார்.. சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!!
திமுக துணை நிற்கும்
அன்பு என்பது சாதி பார்க்காது, மதம் பார்க்காது ,மொழி பார்க்காது, இனம் பார்க்காது, நிறம் பார்க்காது அன்பை அடிப்படையாக கொண்டவர்கள் யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ள கூடியது என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், இதில் பேதம் பார்க்கக்கூடிய யாரும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என பேசினார். சிறுபான்மை மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அன்பின் அடிப்படையில் தான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது எனவும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மையினர் நல வாரியம் அமைக்கப்பட்டது என கூறினார்.
6 மாதங்களில் சாதனை
திமுக ஆட்சியில் சிறுபான்மை நலனுக்காக கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் அரசு மட்டும் நலத்திட்டங்களை செய்திட முடியாது என்ற முதல்வர் இதுபோன்ற இயக்கங்களும் களத்தில் இறங்கி பணியாற்றுவதால் தான் மக்கள் மகிழ்வுடன் வாழ்வதாகக் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பின்னடைவை சரி செய்யும் பணி திமுக அரசுக்கு உள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின் ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 6 மாதங்களில் செய்துள்ளதாக கூறினார்.
அரசு மீது சந்தேகம் தேவையில்லை
அன்பும் கருணையும் கொண்ட அரசை திமுக நடத்திக்கொண்டு உள்ளது என்றும், ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் தாய் போல பார்த்து பார்த்து திட்டங்களைக் கொண்டு வந்தவர் கலைஞர் எனவும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளதாக கூறிய அவர் நிதிச் சுமை இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை திட்டங்களை நிறுத்தாமல் செய்து வருவதாகவும், தேர்தலின்போது அறிவித்த அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றி விட்டதாக தன்னையும் மக்களையும் ஏமாற்ற தயாராக இல்லை எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், வாக்குறுதிகளை நிறைவேற்றிய காட்டுவோம் அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை என்றும் கூறினார்.
மக்கள் மனதில் முதலிடம்
ஏழை எளிய மக்கள் ஆக இருந்தாலும் மகளிராக இருந்தாலும் பழங்குடியினராக இருந்தாலும் இலங்கைத் தமிழராக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் ஆக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும் அனைவரது கோரிக்கையையும் தாயுள்ளத்தோடு செய்து கொண்டிருப்பதாகவும், தமிழக அரசு இன்று மக்களுடைய மனதில் முதலிடத்தை பிடித்து இருப்பதாகவும், அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் சட்டம் அந்த சட்டப்படி திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்
English abstract
Tamil Nadu Leader Minister MK Stalin has stated that the DMK will at all times stand by way of the minority folks. On behalf of the Christian Goodwill Motion, a Christmas birthday celebration used to be held on the Santom College premises in Chennai.