Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Button
    FH Edits
    T Trends

    தொலைந்து போவதை விட எலும்புகள் உடைவது மேல் – வேகமாக ஓடிய ஆட்டோவிலிருந்து குதித்த பெண்!

    makeflow.mks@gmail.comBy [email protected]23/12/2021No Comments3 Mins Read

    தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்ட டேட்டாக்களின் படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக 371,503 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில் கடத்தல், துன்புறுத்தல், வரதட்சணை மரணங்கள், கற்பழிப்புகள் மற்றும் ஆசிட் தாக்குதல்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் சமீபத்தில் ஹரியானாவின் குருகிராமில் வசிக்கும் நிஷ்தா பாலிவால் என்ற இளம்பெண் தனக்கு நிறைந்த ஒரு திகிலூட்டும் அனுபவத்தை சோஷியல் மீடியாவான ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டார்.தனது சமீபத்திய ட்விட்டர் போஸ்ட்டில் அவர் ஒரு ஆட்டோ டிரைவரால் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் பற்றி விவரித்தார். மேலும் அந்த ஆட்டோ டிரைவர் வேண்டுமென்றே தவறான பாதையில் சென்றதால், தனக்கு நேர்ந்த கொடுமையையும் விவரித்துள்ளார். தனது ட்விட்டர் பயோவில் தன்னை ஒரு தகவல் தொடர்பு நிபுணர் என்று குறிப்பிட்டுள்ள நிஷ்தா பாலிவால், குறிப்பிட்ட ஆட்டோ டிரைவரால் தான் கிட்டத்தட்ட கடத்தப்பட்டதாக” தனது போஸ்ட்டில் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 19 அன்று குர்கான் செக்டார் 22-ல் மதியம் 12:30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. குர்கான் செக்டார் 22 பகுதியானது தனது வீட்டிலிருந்து வெறும் 7 நிமிட பயண தூரத்தில் தான் உள்ளது என்றும் நிஷ்தா குறிப்பிட்டு இருக்கிறார். தான் பயணித்த ஆட்டோரிக்‌ஷா டிரைவர் சரியான பாதையில் செல்லாமல், வேண்டுமென்றே தவறான வழியில் செல்வதை எதிர்த்த தொடர்ந்து கேள்வி கேட்ட போதும் கூட அவர் பதிலளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

    ALSO READ |  இந்தியாவில் அதிகரிக்கும் ஒமைக்ரான்… புதிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

    இது குறித்து அவர் ஷேர் செய்துள்ள ட்விட்டர் போஸ்ட்டில் கூறி இருப்பதாவது, “நேற்று எனது வாழ்க்கையின் பயங்கரமான நாட்களில் ஒன்றாகும், ஏனெனில் நான் கிட்டத்தட்ட கடத்தப்பட்டேன் / கடத்தப்பட்டேன் என்று நினைக்கிறேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அது இன்னும் எனக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது. மதியம் 12:30 மணி,

    நான் 7 நிமிட தூரத்தில் உள்ள எனது வீட்டிற்கு செக் 22 (குர்கான்) பரபரப்பான சந்தையின் ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து ஆட்டோவில் புறப்பட்டேன். என்னிடம் பணம் இல்லாததால் நான் உங்களுக்கு Paytm மூலம் உரிய கட்டணத்தை செலுத்தி விடுகிறேன் என்று கூறினேன். ஏனென்றால் அவரையும், அவரது ஆட்டோ செட்டப்பையும் பார்த்தால் Uber-க்கு ஆட்டோவை ஓட்டுவது போல் இருந்தது. அதனால் தான் நாம் அவரிடம் Paytm செய்வதாக கூறினேன். நான் சொன்னதற்கு அவர் சம்மதிக்க பிறகு தான் நான் ஆட்டோவில் அமர்ந்தேன். அவர் பக்தி பாடல்களை நியாயமான அளவு சத்தம் வைத்து கேட்டு கொண்டிருந்தார்.

    ALSO READ |  நாடு முழுவதும் 6,071 ரயில்வே ஸ்டேஷன்களில் வேகமான, இலவச Wi-Fi

    எனது ஏரியாவிற்கு திரும்பும் ஒரு டர்னிங் வந்ததும் அவர் இடதுபுறம் திரும்பினார். ஆனால் நான் செல்ல வேண்டியதோ வலப்புறம். ஆனால் அவர் இடதுபுறம் சென்றதால் அதிர்ச்சியடைந்த நான் நீங்கள் ஏன் இடதுபுறம் செல்கிறீர்கள் என கேட்டேன். அவர் கேட்கவில்லை, அதற்கு பதிலாக அவர் கடவுளின் பெயரை கத்தத் தொடங்கினார் (இது எந்த மதத்திற்கும் தொடர்புடையது அல்ல என்பதால் நான் இங்கு மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை).

     

     

    The previous day was once probably the most scariest days of my existence as I feel I used to be virtually kidnapped/ abducted. I don’t know what it was once, it’s nonetheless giving me chills. Arnd 12:30 pm, I took an auto from the automobile stand of a hectic marketplace Sec 22 (#Gurgaon) for my house which is like 7 minutes away (1/8)


    — Nishtha (@nishtha_paliwal) December 20, 2021

     

    ஒரு கட்டத்தில் நான் உரக்க கத்தி அவரின் இடது தோளில் 8 – 10 முறை அடித்தேன். அப்போது எனது மனதில் தோன்றிய எண்ணம், இது சரியில்லை நீ வெளியே குதித்து விடு என்பது தான். ஆட்டோ சுமார் 35-40 கிமீ ஸ்பீடில் சென்று கொண்டிருந்தது. முற்றிலும் தொலைந்து போவதை விட, எலும்புகள் உடைவது மேல் என தோன்றியதால் அவர் மேலும் ஸ்பீட் எடுக்கும் முன் நான் ஓடி கொண்டிருந்த ஆட்டோவிலிருந்து குதித்தேன்!

    ALSO READ | நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு? பிரதமர் இன்று மாலை முக்கிய ஆலோசனை

    எனக்கு எப்படி அந்த தைரியம் வந்தது என்று தெரியவில்லை. ஆட்டோ நம்பரை நான் கடைசி வரை கவனிக்கவில்லை. தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அந்த டிரைவரை கண்டுபிடிக்க போலீசார் உறுதி அளித்துள்ளதாகவும் கூறி இருக்கிறார்.

    செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Smart Order Routing: Crucial For Crypto Execution
    • Online-pelaamisen tulevaisuus ja sen haasteet
    • Web App Vs Website: Key Differences Explained
    • Leo Movie Tamil 2024 Full Movie HD Download
    • Finest Crypto Indicators For Profitable Trading Methods
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2025 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.