Delhi
oi-Mathivanan Maran
டெல்லி: நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்துவதாக லோக்சபாவில் தமிழக எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை. நீட் நுழைவுத் தேர்வு தரும் நெருக்கடியால் மருத்துவ படிப்பை பறிகொடுத்த அனிதா தொடங்கி மாண்வர்கள் மரணம் தொடருகிறது.
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு உண்டா? இல்லையா?.. இரண்டில் ஒன்று தெளிவாக சொல்லுங்க.. கேட்பது ராமதாஸ்
நீட் மசோதாவும் ஆளுநரும்
இதனையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய கோரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தமிழக ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல தமிழக சட்டசபை தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
நாடாளுமன்றத்தில்..
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் விவகாரத்தை எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்திலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் பதாகைகளுடன் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தில்..
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் விவகாரத்தை எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்திலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் பதாகைகளுடன் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
லோக்சபாவில் டி.ஆர்.பாலு
லோக்சபாவில் இது குறித்து பேசிய திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 200-ன் கீழ், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பாமல், தமிழக ஆளுநர் காலம் தாழ்த்துவது சட்ட விரோதம் என்று விமர்சித்தார். அப்போது தமிழக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
பதாகைகள்- முழக்கங்கள்
நீட் தேர்வை ரத்து செய்; நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குக; என்கிற பதாகைகள் ஏந்தியபடி திமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் லோக்சபாவில் அமளி நிலவியது. இது தொடர்பாக இடதுசாரி எம்.பி. சு.வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிட மக்களவையிலும், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக தலையிட கோரி மாநிலங்களவையிலும், விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்றதில் அமைச்சரை நீக்க வீதியிலும் போராடினோம்! என பதிவிட்டுள்ளார்.
English abstract
Tamilnadu MPs lately Raised the NEET factor in Loksabha, Parliament.
Tale first revealed: Tuesday, December 21, 2021, 18:38 [IST]