இது ஒரு பால் விளம்பரமாகும். மாடுகளுக்கு பதில் பெண்களை மாடுகள் போன்று சித்தரித்து இந்த விளம்பரத்தை எடுத்துள்ளனர். இந்த விளம்பரம் தான் தற்போது தென் கொரிய ஊடகங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. பெண்களை எப்படி இது போன்று இழிவு செய்யலாம் என்று பலர் கொதித்தெழுந்துள்ளனர். இந்த விளம்பரத்தை சீயோல் மில்க் என்கிற நிறுவனம் தான் எடுத்துள்ளது.
இந்த விளம்பரத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் ஓடையில் ஓடும் தண்ணீரை குடித்து கொண்டிருக்கிறார். மேலும் மாடுகள் எப்படி வயலில் மேய்த்து கொண்டிருக்குமோ அதே போன்ற காட்சி அமைப்பில் பல பெண்கள் யோகா செய்யும் நிலையில் இருக்கின்றனர். இவற்றை ஒரு புகைப்பட கலைஞர் பார்த்துவிட்டு வீடியோவாக எடுக்க முயற்சிக்கிறார். அப்போது அவரின் கால் கீழே உள்ள சிறிய கட்டையின் மீதுபட்டு சத்தம் வருகிறது. இதை அந்த பெண்கள் அறிந்தவுடன் மாடுகளாக மாறி விடுகின்றனர்.
இப்படியொரு காட்சி அமைப்பை வைத்ததால் தான் பலர் இந்த விளம்பரத்தை எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக பெண்களின் அனுமதி இல்லாமலே அவர்களை படம்பிடித்தது மிக பெரிய குற்றமாக இருந்தாலும், அதை விளம்பரத்தின் மூலம் வெளிக்காட்டுவது இன்னும் கொடூரமானது. மேலும் பெண்களை மாடுகளாக சித்தரித்து வைத்திருப்பது மற்றொரு அபத்தமாகும். இதை எதிர்த்து பலர் குரல்களை எழுப்பி வந்ததால் இந்த விளம்பரத்தை அந்நிறுவனம் நீக்கி உள்ளது.
இருப்பினும் இது வெளியாகிய உடனே வைரலானதால் பல சமூக வலைதளங்களிலும், யூடியூப்பிலும் உள்ளது. மேலும் இந்த விளம்பரத்தை பலர் மோசமான முறையில் விமர்சித்து வருகின்றனர். அதில் சிலர் ‘மோல்கா பிளஸ் மிசோகைனி'(molka plus misogyny) என்று குறிப்பிட்டுள்ளனர். தென் கொரியாவில் பயன்படுத்தும் சிறிய அளவிலான கேமிராக்களை இது குறிக்கிறது. இதை வைத்து பெண்களை அவர்களின் உரிமை இன்றி மறைவான முறையில் படம் எடுப்பதாகும். இது போன்ற நிகழ்வுகள் தென் கொரியாவில் அதிகம் உள்ளதால் இந்த விளம்பரத்தை அதனுடன் ஒப்பிட்டு கூறியுள்ளனர்.
Additionally learn… டிக்டாக் வீடியோவால் மாட்டிக்கொண்ட திருடன்… வைரலாகும் வீடியோ!
எதிர்காலத்தில் இது போன்ற தேவையற்ற விளம்பரங்கள் தயாரிக்காமல் இருக்க வேண்டும் என்பதே பெண்களின் சார்பான கோரிக்கையாக இருக்கிறது.
Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube