Chennai
oi-Jeyalakshmi C
சென்னை: மஞ்சப்பை அவமானம் அல்ல. அழகான நிறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பிஸாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பாதிக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவிகள், சுய உதவிக்குழு பெண்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மஞ்சள் பைகளை முதல்வர் வழங்கினார்.
‘ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டேன்’.. பிரசாந்த் கிஷோர் உறுதி.. இதுக்கு சொன்ன காரணம் என்ன தெரியுமா?
அனைத்து துறைகளிலும் முன்னிலை
விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகபெரிய சவாலாக உள்ளது என்றும் அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மஞ்சள் பையே சுற்றுச்சூழலுக்கு ஏற்றது மற்றும் சிறந்தது என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அழகானவை கேடு தரும்
தொடர்ந்து பேசிய முதல்வர், மஞ்சப்பை அவமானம் அல்ல. அழகான நிறத்தில் இருக்கும் பிஸாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிஸாஸ்டிக் பயன்பாட்டை நாம் உடனடியாகக் குறைக்க வேண்டும். மஞ்சப்பைதான் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது.
மண் பாதிப்பு
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு பிறகு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் சூழலை மாசாக்குகின்றன. பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் அது மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண் பாதிக்கப்படுகிறது. மண் பாதிக்கப்பட்டால் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. கால்நடைகள் அதைச் சாப்பிட்டு உயிரிழக்கும்.
பிளாஸ்டிக் தவிர்ப்போம்
பிளாஸ்டிக்கை நீர் நிலையங்களில் தூக்கி எறிந்தால் அங்குள்ள நீர் நிலையங்களும் மாசடைகின்றன. கடலின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பபடுகிறது. எனவே பிஸாஸ்டின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முன்னோடி
சமூக வலைதளங்களிலும் இடைவிடாது பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்கம் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்துவிட முடியாது. மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியும். எனவே மஞ்சப்பைதான் சிறந்தது. அனைத்துத் தொழில்களிலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
English abstract
Manjappai isn’t a disgrace. Leader Minister MK Stalin has stated that each one plastic luggage in stunning colours are destructive to the surroundings. Leader Minister Stalin stated that using pistachios will have to be utterly abolished in Tamil Nadu.
Tale first revealed: Thursday, December 23, 2021, 13:22 [IST]