ஆறு மாதம் தான்
அவகாசம்
அந்த
அபூர்வ மலருக்கென
அதிர்ச்சியை
தந்தது
மருத்துவ
மனித கடவுள்கள்…
முதுகுத்
தண்டுவடத்
தசை
முரண்பாடால்
நரம்புகள்
முற்றிலும்
முதிர்ந்த
செயலில்
நின்றது
தசை இயக்கம்…
ஐந்து மாத
ஆயுட்காலத்தை
மட்டுமே
அனுபவித்த
அந்த
மொட்டு
இன்னும்
ஒரு மாதத்தில்
ஒரே டோஸ்
16 கோடி
மதிப்பிலான
அமெரிக்க
மருந்து
“சோய்கென்ஸ்மா”வால்
உயிர்
பிழைக்க
காத்திருந்தது…
கூட்டு நிதிநல்கை யால்
12 கோடியை
திரட்டிய
திடகாத்திர
மனநிலை
பெற்றோர்கள்…
இறக்குமதிவரி
6கோடியை
அகற்றிய
பிரதமர்
நரேந்திர மோடி…
எல்லா
மொட்டும்
மலர்வதில்லை…
மறுபடி
மலர்ந்த
டீரா…