அதில் உள்ள ஐஸ்கிரீம், கேக்குகள், இன்னும் பல இனிப்பு பண்டங்கள் போன்றவற்றை அந்த சிறுவன் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்வதையும் ஏதோ ஒரு கேம் என்று நினைத்து கொண்டு இவ்வாறு செய்து விட்டான் போல. இதன்படி சுமார் 1200 டாலர் மதிப்புள்ள ஐஸ்கிரீம் மற்றும் பல இனிப்பு பண்டங்களை அந்த சிறுவன் ஆர்டர் செய்துள்ளான். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.64,900 ஆகும். அவரின் அப்பாவின் மொபைலில் இருந்து ஆர்டர் செய்ததால் இந்த உணவு பொருட்கள் அனைத்தும் அவரின் அலுவலக முகவரிக்கு ஆர்டர் செய்யப்பட்டது.
ஆர்டர் பெறப்பட்டதும் இந்த சிறுவனின் அப்பாவிற்கு மெசேஜ் வந்துள்ளது. இதை பார்த்ததும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. யார் இவ்வளவு உணவுகளை ஆர்டர் செய்தார் என்று அவர் குழம்பி உள்ளார். இதில் கொடுமை என்னவென்றால், அவருக்கு அன்று அலுவலகம் விடுமுறையில் இருந்துள்ளது. பிறகு தான் தெரிய வந்தது அவை அனைத்தையும் தனது மகன் தான் தவறுதலாக ஆர்டர் செய்துள்ளான் என்று. உடனே அலுவலகம் புறப்பட்டு சென்று ரூ.64,900 மதிப்புள்ள ஆர்டரை பெற்று கொண்டார். அதில் விலை உயர்ந்த ஜெலடோ மெசினா ஐஸ்கிரீம், 14 ஜார் டுல்சே டே லெச்சே ஐஸ்கிரீம், 7 கேக்குகள், 5 பாட்டில் பால், இன்னும் 6 பாக்ஸ் ஐஸ்கிரீம் போன்றவை ஆர்டராக வந்துள்ளது.
வேறு வழியின்றி இவர் மகன் தவறுதலாக ஆர்டர் செய்த ஐஸ்கிரீம், கேக்குகள் மற்றும் பலவற்றை அவர் வேலை செய்கின்ற தீயணைப்பு துறையில் உள்ள நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இந்த ஆர்டருக்கு வந்த பில் அவரின் மகனின் உயரத்தை விடவும் அதிக உயரமாக இருந்துள்ளது. இந்த வினோத நிகழ்வை உபர் ஈட்ஸ் டெலிவரி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Additionally learn… விண்வெளிக்கே சென்று உணவு டெலிவரி செய்த உபெர் ஈட்ஸ்… ஜப்பானிய கோடீஸ்வரரால் நிகழ்ந்த சாதனை!
இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த பதிவை கண்டு பல கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த சிறுவனுக்கு இந்த தவறுக்காக தண்டனை வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவர், “அந்த சிறுவனுக்கு இனி வாழ்நாள் முழுவதும் ஐஸ்கிரீம் சாப்பிட தடை விதிக்க வேண்டும்’ என்று விளையாட்டாக கமெண்ட் செய்துள்ளார்.
குழந்தைகளிடம் மொபைலை கொடுக்கும்போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு நினைவுப்படுத்துகிறது.
Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube