Chennai
oi-Vigneshkumar
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மட்டும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 11 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு முடியாத தொடர்கதையைப் போலத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆல்பா, டெல்டா என அடுத்தடுத்த அலைகளை ஏற்பட்ட நிலையில், தற்போது ஓமிக்ரான் புதிய தலைவலியைக் கொடுக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான், இப்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.
ஒரே நாளில்.. அமெரிக்காவில் 2 லட்சம், யு.கேவில் 1 லட்சம்.. தாண்டவம் ஆடும் கொரோனா.. அதிர்ச்சி பின்னணி!
வெளிநாடு & வெளி மாநிலங்கள்
தமிழ்நாட்டிலும் அப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கவலைக்குரிய நாடுகள் பட்டியலில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை விமான நிலையத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து திரும்பிய தலா இருவருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஆந்திராவில் இருந்து வந்த 3 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய இருவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் வெளிநாடு & வெளி மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் இது தான் அதிகம்.
கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1.03 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் மொத்தம் 596 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா கேஸ்களையும் சேர்த்தால் மாநிலத்தில் இன்றைய தினசரி கொரோனா பாதிப்பு 607ஆக உள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 27,42,224 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6p.cஆக உள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு
அதிகபட்சமாகச் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 1.1ஆக உள்ளது. மாநில வாரியாக பாதிப்பில் அதிகபட்சமாகச் சென்னையில் 145 பேருக்கும் கோவையில் 92 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல செங்கல்பட்டிலும் 56 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.8p.cஆகவும் கோவையில் 1p.cஆகவும் உள்ளது. இன்று அரியலூர் மாவட்டத்தில் மட்டும் யாருக்கும் கொரோனா கண்டறியப்படவில்லை.
உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகச் சென்னையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் மொத்தம் 36,707 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
ஆக்டிவ் கேஸ்கள் பல நாட்களுக்குப் பிறகு நேற்று 7000க்கு கீழ் குறைந்த நிலையில், இன்றும் கூட அதே நிலை தான் தொடர்கிறது. நேற்று 6,979ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 6,889ஆகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 689 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,98,628 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.
English abstract
607 peple examined certain for Corona. Tamilnadu Corona circumstances newest updates in Tamil.
Tale first revealed: Thursday, December 23, 2021, 20:44 [IST]