Delhi
oi-Vishnupriya R
டெல்லி: உலகில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகளால் ஓமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் ஓமிக்ரானால் இதுவரை 170-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகள்தான் தீர்வு என சொல்லப்பட்டு மக்கள் தடுப்பூசிகளை போடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்- 6
இந்த நிலையில் தடுப்பூசி ஒன்றே தீர்வு என கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் இந்தியா உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இது தடுப்பூசிக்கு மசியாது என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்டு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இது போன்ற வேரியண்ட்டை கட்டுப்படுத்த 3-ஆவது பூஸ்டர் டோஸ் அவசியமா இல்லையா என்பதை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அமெரிக்கா
இந்தியாவை போன்று ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. இந்த நிலையில் உலகில் உள்ள தடுப்பூசிகளால் ஓமிக்ரான் போன்ற வீரியமிக்க வேரியண்ட்களை எதிர்கொள்வது கடினமானது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாடர்னா
அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகியவை பூஸ்டர் டோஸுடன் போடும் போது புதிய வைரஸ்களின் பரவல்களை தடுக்கும். ஆனால் அந்த வேக்சின்கள் எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. அது போல் ஆஸ்ட்ராஜெனிகா, ஜான்சன் மற்றும் ஜான்சன், சீனா, ரஷ்யாவில் (ஸ்பூட்னிக்) உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளும் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தாது.
செயல்திறன்
உலகளவில் பலர் இன்னும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளாத நிலையில் இது போன்ற தடுப்பூசியின் செயல்திறன் குறித்த கேள்வி எழுந்துள்ளது வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஃபைசர் மற்றும் மாடர்னாவில் எம் ஆர்என்ஏ தொழில்நுட்பம் கொண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டதால் அவை சிறப்பாக செயல்படுகின்றன. மற்றவை எல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பழமையான முறையில் தயாரிக்கப்பட்டதாகும்.
சினோவாக்
சீனாவின் சினோபார்ம் மற்றும் சினோவாக் ஆகிய தடுப்பூசிகள் உலகில் உள்ள 50 சதவீத நாடுகளில் கிடைக்கிறது. ஆனால் அவரை ஓமிக்ரானை எதிர்த்து போராடக் கூடியதல்ல. ஆனால் சீனாவில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த ஊசியை செலுத்திக் கொண்டனர். நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கக் கூடிய மெக்சிகோ மற்றும் பிரேசிலிலும் இந்த தடுப்பூசியே பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிரிக்கா
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசியும் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது. அது போல் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு- ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியும் போட்டுக் கொண்ட 6 மாதங்கள் கழித்து புதிய வைரஸை எதிர்த்து போராட முடியாதது என தெரிகிறது. இந்தியாவில் போடப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினும் இதே போல் ஓமிக்ரானை எதிர்க்கும் வல்லமை இல்லாதது. இவையும் உலகளவில் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 90 சதவீதம் பேர் இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். 44 நாடுகளுக்கு இந்த தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
English abstract
Do any vaccines in Global save you an infection from Omicron?