Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    பெண்களை மாடுகளுடன் ஒப்பிட்டு எடுத்த விளம்பரம்… வலுத்த எதிர்ப்புகள்!

    makeflow.mks@gmail.comBy [email protected]21/12/2021No Comments2 Mins Read

    இந்த 21 நூற்றாண்டிலும் பல விஷயங்கள் ஏற்ற தாழ்வுகளுடனே இருந்து வருகிறது. ஆண், பெண் வேறுபாடு முதல் ஜாதி வேறுபாடுகள் வரை பல்வேறு பிரிவினைகள் இங்குள்ளது. மனிதர்களாக பிறந்த எல்லோரும் சமம் என்பதை பாட புத்தகத்தில் படித்தால் மட்டும் போதாது. அதை நடைமுறையிலும் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக ஆண், பெண் வேறுபாடுகள் இன்று பல வகையில் வெளிப்பட்டு வருகிறது. திரைப்படங்கள் முதல் சாதாரண டிவி விளம்பரங்கள் வரை பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலே எடுக்கப்பட்டு வருகிறது.இது போன்ற ஒரு மோசமான நிகழ்வு தான் தென் கொரியாவில் நடந்துள்ளது. பெண்களை வைத்து எடுக்கப்படும் ஆண்களின் பெர்பியூம் விளம்பரம், ஆண்களின் உள்ளாடை விளம்பரம், ஆண்களின் லுங்கி விளம்பரம் ஆகியவற்றில் எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண்ணை சேர்த்திருப்பார்கள். இப்படியொரு தேவையற்ற விளம்பரம் தான் தென் கொரியாவில் எடுக்கப்பட்டுள்ளது.

    இது ஒரு பால் விளம்பரமாகும். மாடுகளுக்கு பதில் பெண்களை மாடுகள் போன்று சித்தரித்து இந்த விளம்பரத்தை எடுத்துள்ளனர். இந்த விளம்பரம் தான் தற்போது தென் கொரிய ஊடகங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. பெண்களை எப்படி இது போன்று இழிவு செய்யலாம் என்று பலர் கொதித்தெழுந்துள்ளனர். இந்த விளம்பரத்தை சீயோல் மில்க் என்கிற நிறுவனம் தான் எடுத்துள்ளது.

    இந்த விளம்பரத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் ஓடையில் ஓடும் தண்ணீரை குடித்து கொண்டிருக்கிறார். மேலும் மாடுகள் எப்படி வயலில் மேய்த்து கொண்டிருக்குமோ அதே போன்ற காட்சி அமைப்பில் பல பெண்கள் யோகா செய்யும் நிலையில் இருக்கின்றனர். இவற்றை ஒரு புகைப்பட கலைஞர் பார்த்துவிட்டு வீடியோவாக எடுக்க முயற்சிக்கிறார். அப்போது அவரின் கால் கீழே உள்ள சிறிய கட்டையின் மீதுபட்டு சத்தம் வருகிறது. இதை அந்த பெண்கள் அறிந்தவுடன் மாடுகளாக மாறி விடுகின்றனர்.

    இப்படியொரு காட்சி அமைப்பை வைத்ததால் தான் பலர் இந்த விளம்பரத்தை எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக பெண்களின் அனுமதி இல்லாமலே அவர்களை படம்பிடித்தது மிக பெரிய குற்றமாக இருந்தாலும், அதை விளம்பரத்தின் மூலம் வெளிக்காட்டுவது இன்னும் கொடூரமானது. மேலும் பெண்களை மாடுகளாக சித்தரித்து வைத்திருப்பது மற்றொரு அபத்தமாகும். இதை எதிர்த்து பலர் குரல்களை எழுப்பி வந்ததால் இந்த விளம்பரத்தை அந்நிறுவனம் நீக்கி உள்ளது.

    இருப்பினும் இது வெளியாகிய உடனே வைரலானதால் பல சமூக வலைதளங்களிலும், யூடியூப்பிலும் உள்ளது. மேலும் இந்த விளம்பரத்தை பலர் மோசமான முறையில் விமர்சித்து வருகின்றனர். அதில் சிலர் ‘மோல்கா பிளஸ் மிசோகைனி'(molka plus misogyny) என்று குறிப்பிட்டுள்ளனர். தென் கொரியாவில் பயன்படுத்தும் சிறிய அளவிலான கேமிராக்களை இது குறிக்கிறது. இதை வைத்து பெண்களை அவர்களின் உரிமை இன்றி மறைவான முறையில் படம் எடுப்பதாகும். இது போன்ற நிகழ்வுகள் தென் கொரியாவில் அதிகம் உள்ளதால் இந்த விளம்பரத்தை அதனுடன் ஒப்பிட்டு கூறியுள்ளனர்.

    Additionally learn… டிக்டாக் வீடியோவால் மாட்டிக்கொண்ட திருடன்… வைரலாகும் வீடியோ!

    எதிர்காலத்தில் இது போன்ற தேவையற்ற விளம்பரங்கள் தயாரிக்காமல் இருக்க வேண்டும் என்பதே பெண்களின் சார்பான கோரிக்கையாக இருக்கிறது.

    Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • #179 – Mariya Moeva on the Impact of Google’s SiteKit on WordPress
    • The FAIR Package Manager Just Launched as a WordPress Repository Alternative – but What Exactly Is It?
    • I Tried Hostinger’s New Horizons AI Developer Tool: Is the Hype Justified?
    • Google Just Released an Avalanche of New AI Tools…Here’s the Breakdown
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.