இந்த வீடியோவை வெளியிட்டதோடு, விண்வெளி வீரர்களுக்கு அனுப்பப்பட்ட உணவுகள் குறித்தும் உபெர் ஈட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, உணவு கேன்களில் மிசோவில் வேகவைத்த கானாங்கெளுத்தி, இனிப்பு சாஸில் சமைத்த மாட்டிறைச்சி, மூங்கில் தளிர்களுடன் வேகவைத்த கோழி மற்றும் பிரேஸ் செய்யப்பட்ட பன்றி இறைச்சி ஆகியவை இருப்பதாக தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்களுக்கான நிலையான விண்வெளி உணவில் இருந்து இந்த உணவு ஒரு “welcome wreck” ஆக இருக்கும் என்று Uber Eats வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Uber Eats のデリバリーは、進化し続けています。
今、配達していない場所へ、次々と。@yousuck2020 さん、配達ありがとうございます🚀#宇宙へデリバリー #UberEats pic.twitter.com/Sh0PsXXwMX
— Uber Eats Japan(ウーバーイーツ) (@UberEats_JP) December 14, 2021
விண்வெளியில் தங்களது முதல் உணவு விநியோகத்திற்குப் பிறகு, நிறுவனம் “SPACEFOOD” என்ற விளம்பரக் குறியீட்டின் கீழ் இலாபகரமான சலுகைகளையும் வழங்கியது. இதுகுறித்து நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, பூமியில் உள்ள மக்கள் இந்த சாதனையை கொண்டாட வேண்டும். இந்த டெலிவரி Uber இன் ஒரு மாபெரும் சாதனையைக் குறிக்கிறது. ஏனெனில் மக்கள் விண்வெளி உட்பட எங்கு சென்றாலும் அவர்கள் விரும்பும் எதையும் கொடுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
இந்த உணவு நிறுவனத்துடன் இணைந்த கோடீஸ்வரர் யுசாகு, கஜகஸ்தானின் பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் தயாரித்த சோயுஸ் விண்கலத்தில் விண்ணுக்குச் சென்றார். பில்லியனரும் தொழில்முனைவோருமான இவர் ஒரு விண்வெளி ஆர்வலர் என்பதை அவரது பயணம் உணர்த்துகிறது. இவர் கடந்த 2018-இல் சந்திரனுக்கு செல்லும் முதல் சுற்றுலா விமானம் குறித்து ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்த போது, விமானத்தின் அனைத்து இருக்கைகளையும் வாங்கி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.
Additionally learn… Corona Vaccination | ஒரே நாளில் 10 முறை கோவிட் தடுப்பூசிகளை போட்டு கொண்டுள்ள நபர்… அதிகாரிகள் விசாரணை!
ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்த இந்த பயணம் 2023-இல் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ISS-ல் அவரது 12 நாள் பயணத்திற்கு யுசாகு எவ்வளவு செலவிட்டார் என்பதை குறித்து அவர் எந்த வித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மதிப்பீடுகளின்படி, அந்தத் தொகை சுமார் 80 மில்லியன் டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது தோராயமாக ரூ.608 கோடி இருக்கலாம்.
Practice @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Practice @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube