இதை பார்த்த தலைமை காவலரான ராஜேந்திர சோனாவானே உடனே அந்த மாற்று திறனாளிக்கு ஓடிச்சென்று உதவியுள்ளார். அந்த நபரின் கையை பிடித்து மெதுவாக சாலையை கடக்க அவர் உதவி செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை அந்த சிக்னலில் நின்று கொண்டிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். பிறகு இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாக தொடங்கியது.
Our #MrMumbaiPolice, successful hearts around the ‘universe’!
HC Rajendra Sonawane noticed at CSMT street doing what we do very best – lending a serving to hand to these in want!#MumbaiPoliceForAll pic.twitter.com/PTbCJCQXa1— Mumbai Police (@MumbaiPolice) December 13, 2021
இந்த வீடியோவை டுவிட்டரில் மும்பை போலீஸின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். அதில், “எங்களது மும்பை போலீஸ் அதிகாரி, உலகில் உள்ளவர்களின் மனதை வென்றுள்ளார்! தலைமை காவலர் அதிகாரியான ராஜேந்திர சோனாவானே சாலையை கடப்பதற்கு மாற்று திறனாளி ஒருவருக்கு உதவி உள்ளார், இது மிக சிறந்த உதவி” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பல ஆயிரம் பார்த்து வருகின்றனர். மேலும் பலர் ஷேர் செய்தும், ரீட்வீட் செய்தும் வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோவை படம் பிடித்த நபர் அதில் இந்த காவல் அதிகாரிக்கு ‘ஹேட்ஸ் ஆப்’ என்று கூறி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் மும்பை காவல் துறையினரை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ பதிவிற்கு ஏராளமானோர் கமெண்ட் செய்தும் வருகின்றனர். பலர் தலைமை காவலரான ராஜேந்திர சோனாவானேவை புகழ்ந்து வருகின்றனர். அவரின் மனிதாபிமான செயலை கண்டு அவருக்கு சல்யூட் வைக்க வேண்டும் என்று சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.
मुंबई पोलीस फार छान काम करत आहात तुम्ही @MumbaiPolice @CPMumbaiPolice pic.twitter.com/mSGyHOCNM9
— Nitin Hindurao Deshmukh (@iNitinDeshmukh) December 13, 2021
மேலும் ஒருவர், “இந்த உலகில் இவரை போல நல்ல உள்ளங்கள் சிலர் இன்னும் உள்ளார்கள்’ என்று பதிவிட்டுள்ளார். ‘இவரை பார்த்து மற்ற காவல் அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும், மும்மை போலீசிற்கு எனது சல்யூட்’ என்று கமெண்ட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை 21,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு பல ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube