Chennai
oi-Shyamsundar I
சென்னை: ஓமிக்ரான் பரவலை முன்னிட்டு புத்தாண்டு, கிறிஸ்துமஸ் விழாக்களை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு கேஸ் மட்டுமே பதிவாகி இருந்தாலும் மற்ற மாநிலங்களில் கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. டெல்லியில் 57 பேருக்கும், மகாராஷ்டிராவில் 54 பேருக்கும் இதுவரை ஓமிக்ரான் கேஸ்கள் ஏற்பட்டுள்ளது.
குட் நியூஸ்! 7000க்கு கீழ் சென்ற ஆக்டிவ் கேஸ்கள்.. 5 மாவட்டங்களில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை
இந்த நிலையில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் காரணமாக மக்கள் அதிக அளவில் வெளியே செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கொரோனா கேஸ்கள் மேலும் அதிகரிக்கும். இது ஓமிக்ரான் பரவலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இந்த விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேற்கு வங்கம்
அதன்படி மேற்கு வங்கத்தில் இரவு 11 மணிக்கு பின்பான லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 15 வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடாமல் கண்காணிக்கப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் அங்கு கேஸ்கள் குறைவாக உள்ளதால் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் அன்று மட்டும் இரவு நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன.
டெல்லி
டெல்லியில் ஓமிக்ரான் கேஸ்கள் 57 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் வந்து கொண்டு இருக்கின்றன. புத்தாண்டு, கிறிஸ்துமஸை முன்னிட்டு கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி வரை பார்கள், உணவகங்களில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் பொது இடங்களில் கூட்டமாக புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் 54 பேருக்கு இதுவரை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே மும்பையில் டிசம்பர் 31ம் தேதி வரை 144 போடப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் கூடவும், தனியாக கூட்டம் நடத்தவும், கடற்கரைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், நிகழ்வுகளில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
குஜராத்
குஜராத்தில் புத்தாண்டு, கிறிஸ்துமஸை முன்னிட்டு இரவு நேர லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 வரை இரவு நேர லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு 11 ஓமிக்ரான் கேஸ்கள் இதுவரை பதிவாகி உள்ளது. ஜிம்கள், உணவகங்கள் 75% மக்களுடன் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவில்தான் இந்தியாவில் முதலில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. அங்கு எம்ஜி ரோட் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட இதுவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை கடுமையான கட்டுப்பாடுத்கள் அமலில் இருக்கும். பார்கள், உணவகங்கள் 50 சதவிகித மக்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
English abstract
Coronavirus; All you want to grasp concerning the new law in states all over Christmas and New 12 months in India.