Tv
oi-V Vasanthi
சென்னை: அமீர் தான் பட்ட கஷ்டங்களை பற்றி ஏற்கனவே கூறி இருந்தாலும் அவருடைய பாதுகாவலரான அஷ்ரப் கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த மாதிரி ஒரு பெருந்தன்மை யாருக்கும் வராது என்று அஷ்ரப்பை ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
அமீரின் கஷ்டங்களை கேட்டதும் ரசிகர்களின் மனது நொறுங்கிப் போய் விட்டதாம்.
உண்மையில் பேரழகுதான் அமீர் அம்மா…கண்ணீரோடு ஷேர் செய்யும் ரசிகர்கள்
கஷ்டமான இளமைக்காலம்
கொடுமையிலும் கொடுமை வறுமை, அதனிலும் கொடுமை இளமையில் வறுமை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் பலர் இப்ப வரைக்கும் அந்த மாதிரி ஒரு கொடுமையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் ஒருவராக அமீர் இருந்துள்ளார். தன்னுடைய முகம் தெரியாத வயதில் தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வளர்ந்த அமீர் அதற்கு பிறகும் பல நேரங்களில் மூன்று வேளை உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு உள்ளார். ஆனாலும் வெளியே அதை காட்டிக்கொள்ளாமல் தலைசாய்க்க ஓரிடம் தாயின் தலைமடி இருக்கிறது என்ற ஆறுதலோடு இருந்த அமீருக்கு அடுத்ததாக பெரிய இடி வந்து இறங்கியுள்ளது.
தாயின் ஆசை
அமீரின் தாய் எதிர்பாராத விதத்தில் துர்மரணம் அடைந்துள்ளார். அதற்குப் பிறகு அவருக்கு என்று யாருமே இல்லாத நிலையில் அவர் கூலி வேலை செய்து கல்லூரி படிப்பை முடித்து இருந்தாலும், அதற்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தான் தன்னுடைய தாயின் ஆசைப்படி நடனத்தில் கவனத்தை செலுத்த துணிந்து இருக்கிறார். ராணுவத்தில் சேர வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இவருடைய நடன திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பில் இவர் ஜெயித்து விட, தன்னுடைய தாயின் ஆசையே இதுதான் என்று இவரும் அதையே தன்னுடைய லட்சியமாக இருக்க முடிவெடுத்திருக்கிறார்.
அதிர்ந்து போன தருணம்
கலையரங்கம் ஒன்றில் கல்லூரி படிக்கும்போது அமீர் டான்ஸ் கிளாஸ் ஆரம்பித்த நிலையில் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்பதற்காக இவர் சாப்பிடாமல் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மயக்கம் போட்டு விடவே, அந்த நேரத்தில் அருகில் இருந்தவர்களில் ஒருவர் தான் அஷ்ரப் அவர் மருத்துவமனையில் சேர்த்த போது மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு ஆடிப் போய்விட்டாராம். உடலில் தேவையான சாப்பாடு சத்துகள் எதுவும் இல்லை என்று டாக்டர் சொன்னதும் இந்த வயதில் இப்படியா?? என்று இவர் அதிர்ந்து அமீரிடம் பேசியுள்ளார். அப்போதுதான் தன்னுடைய சூழ்நிலைகளை விளக்கியுள்ளார்.
அந்த தருணம்
அஷ்ரப், அமீரை பார்க்கும்போது ஒரு ஓலைக் குடிசையில் ஒரு கட்டில் மட்டுமே இருக்கும் ஒரு வீட்டில் தான் பார்த்து இருக்கிறாராம். அவருக்கு அப்போது பிரியாணி என்றால் என்னவென்று தெரியாதாம். அஷ்ரப் மனைவி சமைத்த பிரியாணியை தான் முதல்முதலாக அமீர் வாழ்க்கையில் சாப்பிட்டுள்ளார். தன்னுடைய வீட்டிற்கு வந்து சாப்பிடும்படி வற்புறுத்தி உள்ளாராம். அதற்குப் பிறகுதான் அவ்வப்போது அஷ்ரப் வீட்டுக்கு அமீர் வந்து சாப்பிட வருவாராம். அதுமட்டுமல்லாமல் அமீர் வாழ்க்கையில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்று அவருக்கு பிடித்த டான்ஸ் துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக பல உதவிகளையும் செய்துள்ளார். தற்போது கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அவரால் முடிந்த உதவிகளையும் இவர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தினமும் அவருக்காக வாக்களித்து கொண்டிருக்கிறாராம்.
பாசத்தால் கடவுளை மிஞ்சி விட்டாரே
ஏற்கனவே அஷ்ரப் பற்றி நேற்றைய எபிசோடில் அமீர் தெளிவாக குறிப்பிட்டிருந்தாலும் அஷ்ரப் அமீரக பல டான்ஸ் ஸ்கூல் வைப்பதற்காக பல முயற்சிகளை எடுத்து அதில் அஷ்ரப்பின் பணமும் கரைந்து உள்ளது. இதை நினைத்து அதை விடவும் அதிகமாக கவலைப்பட்டு உள்ளாராம். ஆனாலும் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும்போது அவ்வளவு மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்று கூறியுள்ளார். இதை கேட்கும்போது ஒவ்வொரு கஷ்டப்படும் நபர்களுக்கும் இந்த மாதிரி ஒருவர் கடவுளாக தெரிகிறார். அது அமீருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் அஷ்ரப் அப்படித்தான் தெரிகிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.
English abstract
Even supposing Aamir has already spoken about his hardships, his bodyguard Ashraf’s remark got here as a surprise to everybody.Fanatics had been praising Ashraf {that a} generosity like this may increasingly by no means come to any individual.
Tale first revealed: Thursday, December 23, 2021, 16:34 [IST]