ஜாஸ்மின் வேலை செய்யும் உணவகத்தில் தன்னுடைய அம்மாவுடன் சாப்பிட வந்துள்ளார் ரீட்டா. ஜாஸ்மின் வடிக்கையாளர்களிடம் நடந்து கொண்ட விதம் ரீட்டாவைக் கவர்ந்தது. உணவகத்தில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்களை கவனிக்க வேண்டும் என்ற போதும், ஜாஸ்மின் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் அற்புதமான கஸ்டமர் சர்வீஸ் வழங்கியதைக் கண்டு மிகவும் இம்ப்ரஸ் ஆகி விட்டேன் என்று ரீட்டா தெரிவித்தார்.
ALSO READ | சுஷாந்த் சிங் ராஜ்புத் பாடலுக்கு நடனமாடிய தான்சானியா இளைஞர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ
ஜாஸ்மினின் அற்புதமான சேவையை பாராட்டிய ரீட்டா, அப்படியே விடாமல், அவரைப் பற்றி தன்னுடைய பேஸ்புக் கணக்கில் புகழ்ந்து தள்ளியுள்ளார். இன்று நானும் அம்மாவும் IHOP க்கு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடச் சென்றோம். இது வரை என் வாழ்நாளிலேயே கிடைக்காத மிகச்சிறந்த சேவை கிடைத்தது.
அது எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும் உணவகம். ஆனால், எங்களுடைய வெயிட்ரஸ ஜாஸ்மின் கஸ்டில்லோ மிகவும் பிரொஃபஷனலாக நடந்து கொண்டார். அவர் எல்லாரையும் கவனித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே நாங்கள் அவருக்கு கூடுதலாக டிப்ஸ் வழங்க முடிவு செய்தோம். எங்களுடைய பிரேக்பாஸ்ட் பில் 30 டாலர், நாங்கள் அவருக்கு 20 டாலர் டிப்ஸாக வழங்கினோம்.
ஜாஸ்மினுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பெண் குழந்தையை டேகேரில் விடுவதற்கு போதிய கட்டணம் செலுத்த முடியாததால், தினமும் இவரால் Uber கட்டணம் செலுத்த முடியவில்லை. இந்த காரணத்தால் ஜாஸ்மின் தன்னுடைய வேலையை விடப் போவதாக விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், வருமானத்துக்கு வேறு ஆதாரங்கள் இல்லாததால் தொடர்ந்து வேலைக்கு வந்திருந்தார்.
ALSO READ | திருமணத்தில் நடந்த விபரீதம் … இணையத்தில் வைரலாகும் வீடியோ
ரீட்டாவை சந்தித்த அன்று ஜாஸ்மீன் வேலைக்கு வரவேண்டாம் என நினைத்துக் கொண்டிருந்தார். ஜாஸ்மினின் கதையைக் கேட்ட ரீட்டா கூடுதலாக டிப்ஸ் வழங்கினார். அதற்கு அவரை அனைத்துக் கொண்டு, நன்றி தெரிவித்தார். இது எனக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பது உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
கூடுதலாக டிப்ஸ் அளித்ததோடு மட்டுமல்லாமல் ஜாஸ்மின் குழந்தையை வைத்துக்கொண்டு பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுகிறார் என்ற காரணத்தால் அவருடைய கேஷ் ஆப் கணக்கு ஐடியை பெற்றுக்கொண்டார். கேட்ட உடனேயே ஜாஸ்மின் கொடுக்கவில்லை என்றாலும் பலமுறை கேட்ட ரீட்டா கேட்ட பிறகு, தவிர்க்க முடியாமல் ஐடியை வழங்கினார்.
ALSO READ | 2 அடுக்கு வீடு, தனி டிவி மற்றும் ஃப்ரிட்ஜூடன் சொகுசாக வாழும் கோல்டன் ரெட்ரீவர்!
இந்த விவரங்களை தன்னுடைய பேஸ்புக் கணக்கில் பகிர்ந்த ரீட்டா, ஜாஸ்மினின் கேஷ் ஆப் கணக்கின் ஐடியையும் சேர்த்தார். ரீட்டாவின் பதிவைக் கண்ட பலரும் ஜாஸ்மினுக்கு உதவி செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்குள் ஜாஸ்மினுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஏழு லட்சம் ரூபாய்க்கும் மேல் டிப்ஸ் வழங்கப்பட்டிருந்தது.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.