சென்னை: எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சியையாவது கூட்டணிக் கட்சியான திமுகவிடம் இருந்து கேட்டுப்பெறும் திட்டத்தில் இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. திமுக தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லாததால் இவ்விவகாரத்தில் சிறுத்தைகளுக்கு சற்றே வருத்தமாம். கடலூர் மேயர் பதவியை குறிவைத்து விடுதலை சிறுத்தைகள் காய் நகர்த்தி வரும் நிலையில், உள்ளுர் திமுகவினர் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கத்