Lucknow
oi-Shyamsundar I
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அமைப்பு நடத்திய ரெய்டு ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே தற்போது பல்வேறு இடங்களில் அங்கு வருமானவரித்துறை ரெய்டும், அமலாக்கத்துறை ரெய்டும் நடந்து வருகிறது.
ஜிஎஸ்டி அதிகாரிகள் சார்பாகவும் போலீசார் உதவியுடன் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அப்படி நேற்று நடத்தப்பட்ட ரெய்டுதான் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் எதிர்பார்க்கும் அந்த ஒரு மாநகராட்சி! கப்சிப் திமுக! விறுவிறு தேர்தல்!
பியூஸ் ஜெயின்
உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூரில் பியூஸ் ஜெயின் என்ற நபரின் வீட்டில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இவர் அங்கு வாசனை திரவிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பல நாடுகளுக்கு வாசனை திரவியங்களை இவர் ஏற்றுமதி செய்து வருகிறார். சமீபத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பாக வாசனை திரவியம் வெளியிடப்பட்டது.
பியூஸ் ஜெயின்
சமாஜ்வாதி கட்சிக்கு விளம்பரம் கொடுக்கும் வகையில் இந்த வாசனை திரவியம் வெளியிடப்பட்டது. அதேபோல் ஷிகர் பான் என்ற பெயரில் பான் பாக்கு விற்பனையையும் இவரின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பியூஸ் ஜெயின் தனது நிறுவன வருவாயை மறைத்து இவர் ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் இன்னொரு பக்கம் வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டதை அடுத்த இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
வாசனை திரவியம்
ஐடி அதிகாரிகள், ஜிஎஸ்டி அதிகாரிகள், போலீசார் இணைந்து ரெய்டை மேற்கொண்டனர். இதில் பியூஸ் ஜெயின்
வீட்டில் இருந்த பெரிய லாக்கர் ஒன்றை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த லாக்கர் முழுக்க கோடி கோடியாக பணம் இருந்துள்ளது. பாலிதீன் பேப்பர் போட்டு சுற்றப்பட்ட நிலையில் கட்டு கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
பணக்கட்டு
40க்கும் மேற்பட்ட பெரிய பெரிய பணக்கட்டுகள் இருந்துள்ளன. இது போக இன்னொரு பீரோ முழுக்க பணம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். நேற்று இந்த பணத்தை எண்ண தொடங்கிய அதிகாரிகள் தற்போது வரை பணத்தை விடாமல் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
இணையத்தை உலுக்கியது
ஐடி, ஜிஎஸ்டி அதிகாரிகள் பணத்தை எண்ணும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதிகாரிகள் அமர்ந்து இருக்க அவர்களை சுற்றி பணம் குவிக்கப்பட்டு இருக்கும் காட்சிகளும், கவுண்டிங் மெஷின் அடுக்கப்பட்டு இருக்கும் காட்சிகளும் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச அரசியலில் இந்த புகைப்படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English abstract
GST contributors discovered crore of cash piled in Kanpur Bussiness guy space locker.
Tale first printed: Friday, December 24, 2021, 13:09 [IST]