Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    தயிர் பாக்கெட் வாங்குவதற்காக இடையில் ரயிலை நிறுத்திய டிரைவர்.. வேலையை இழந்த பரிதாபம்

    makeflow.mks@gmail.comBy [email protected]24/12/2021No Comments2 Mins Read

    சமூகத்தில் நடக்கும் அநீதிகளை பல முறை சமூக ஊடகங்களின் மூலம் பகிரப்பட்டு அந்த அநீதிக்கான நீதியை பெற்று உள்ளோம். சிறிய பிரச்சனைகள் முதல் மிக பெரிய பாதிப்புகள் வரை சமூக ஊடகங்களின் மூலம் தீர்வு கண்டுள்ளோம். அந்த வகையில், மீண்டும் ஒரு நிகழ்வு தான் பாகிஸ்தானில் நடந்துள்ளது. ஒருவர் எதர்ச்சையாக பகிர்ந்த முக்கிய வீடியோ ஒன்று அந்நாட்டு அரசு வரை சென்று சம்பந்தப்பட்ட நபரின் வேலைக்கே உலை வைத்துள்ளது.ஆம், பாகிஸ்தானை சேர்ந்த ரயில் ஓட்டுநரை பற்றிய அந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்துள்ளது. இந்த ரயில் ஓட்டுநர் எந்தவித அறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஒரு இடத்தில் ரயிலை நிறுத்தி தயிர் (யோகர்ட்) பாக்கெட் வாங்கி வந்துள்ளார். இந்த நிகழ்வை ரயிலில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவை பலர் பார்த்து வருகின்றனர். மேலும் பலரால் இது பகிரப்பட்டும் வருகிறது.

    அந்த வீடியோவில், எந்த ஒரு காரணமும் இல்லாமல் ரயிலை நிறுத்தி விட்டு மிக சாதாரணமாக பயணிகளின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், அந்த ரயில் ஓட்டுநர் அருகில் இருந்த கடைக்கு சென்று தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். இப்படி செய்ததால் அங்கிருந்த பயணிகள் தங்களது பாதுகாப்பு என்னாவது என்று நினைத்து கொண்டு அதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பாகிஸ்தானின் ரயில்வே துறை அமைச்சர் அசாம் கான் பார்த்துவிட்டு, அந்த ரயில் ஓட்டுநரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்மூலம் அந்த ஓட்டுனரின் வேலை பறிபோனது.

    இந்த ரயில் சேவையானது கிழக்கு நகரான லாகூர் மற்றும் தெற்கே கராச்சியை நோக்கிய பயணத்தை கொண்டது. இதற்கிடையில் தான் பாதுகாப்பு இல்லாத முறையில் ரயிலை நிறுத்தியுள்ளார் அந்த ஓட்டுநர். இது குறித்து அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் கூறுகையில், “நாட்டின் சொத்துக்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த எவரையும் அனுமதிப்பதில்லை. இதற்கு முன் இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை. இனி எதிர் காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்ட உடன் நெட்டிசன்கள் இதை வைரலாக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக பலர் இந்த வீடியோவிற்கு சிரிப்பு கொண்ட எமோஜியை பயன்படுத்தி உள்ளனர். மேலும் பலர் கிண்டலான முறையில் அந்த இரயில் ஓட்டுநரை கலாய்த்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Additionally learn… டேட்டிங் சென்ற பெண்ணிடம் ஹோட்டல் பில்லில் சரிபாதி பணத்தை கேட்ட ஆண் நண்பர்!

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாகிஸ்தானில் ரயிலில் சென்ற 60 பேர் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பரிதாபமாக உயிர் இழந்தனர். அப்போது அந்த ரயிலை ஒட்டிய ஓட்டுநர் கடைசி வரை மக்களை காப்பாற்ற போராடினர். இருப்பினும் அந்த கோரமான சம்பவத்தை தடுக்க முடியவில்லை. ஓட்டுநருக்கும் பலத்த காயங்கள் இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த ஊர் மக்கள் தான் இவரை காப்பாற்றி உள்ளனர்.

    செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    • 5 Best Image Optimization Plugins for WordPress in 2026 (Tested on Real Images)
    • Meet Masteriyo – A Free LearnDash Alternative
    • What’s the Best Cache Plugin for WordPress? 5 Options Compared for 2026
    • RSS Feeds List: 100 Most Popular RSS Feeds
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.