Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    800 ஆண்டு பழமையான உடை ஊசியை தனது நிலத்தில் கண்டெடுத்த நபர் – இதன் மதிப்பு தெரியுமா?

    makeflow.mks@gmail.comBy [email protected]22/12/2021No Comments2 Mins Read

    பழமையான பொருட்களுக்கு என்றுமே விலை அதிகம். நமது வீடுகளில் பல நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த பொருட்கள் இருந்தாலும் அது இன்று லட்சங்களில் அல்லது கோடிகளில் ஏலத்தில் எடுக்கப்படும். ஆம், இது முற்றிலும் உண்மை தான். ஒரு பொருளின் பழமையை பொறுத்து அதன் மதிப்பு உயரும். பழங்கால பொருட்களை வாங்குவதற்காகவே உலக அளவில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. பொதுவாக வீடு கட்டும் போதோ அல்லது நிலத்தை சாதாரணமாக தோண்டும் போதோ ஏராளாமான புதையல்கள் சில சமயங்களில் கிடைப்பதுண்டு.அவ்வாறு கிடைக்கும் பொருளிற்கு அதிக மதிப்பு உள்ளது. இது போன்ற ஒரு சிறப்பான நிகழ்வு தான் 44 வயதுள்ள டேவிட் எட்வெர்ட்ஸ் என்பவருக்கும் நடந்துள்ளது. இவர் எதர்ச்சையாக தனது நிலத்தை தோண்டி கொண்டிருக்கும் போது மிகவும் விலை உயர்ந்த பழங்கால பொருள் ஒன்றை கண்டெடுத்துள்ளார். நிலத்தை தோண்டும் போதே அதற்குள் எதாவது கிடைக்க வாய்ப்புள்ளது என்பதற்காக மெட்டல் டிடெக்டர் மிஷனை அங்கு பயன்படுத்தி உள்ளார். இது தான் இவருக்கு மிகவும் உதவி உள்ளது.

    ஆம், வடக்கு வேல்ஸ் என்கிற நகரத்தில் உள்ள தனது நிலத்தில் அவர் தோண்டி கொண்டிருக்கும் போது 800 வருட பழமையான தங்க உடை ஊசியை கண்டெடுத்துள்ளார். இதன் மதிப்பு 100,000 யூரோவாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியை இது தாண்டுகிறது. இந்த உடை ஊசியை ஆய்வு செய்த நிபுணர்கள் இதில் மரகத கற்கள் பதிந்த உடை ஊசி என்பதை கண்டறிந்து கூறியுள்ளனர்.

    இந்த உடை ஊசி நான்கு இன்ச் அளவில் உள்ளது. மேலும் இதன் எடை 4 கிராமாக உள்ளது. இப்படியொரு பழமையான பொருளை கண்டுபிடித்ததை டேவிட்டால் நம்பவே முடிவதில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். இது போன்ற ஒரு அதிர்ஷ்டமான ஒன்றிற்காக தான் இவ்வளவு நாள் தான் காத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உடை ஊசியை டேவிட் கண்டுபிடித்த போது அவருக்கு இருந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. இப்படியொரு புதையல் தனக்கு கிடைத்ததை நினைத்து அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.

    Additionally learn… டேட்டிங் சென்ற பெண்ணிடம் ஹோட்டல் பில்லில் சரிபாதி பணத்தை கேட்ட ஆண் நண்பர்!

    இதற்கு முன் அவரது நிலத்தை ஒரு முறை தோண்டிய போது அதில் வெள்ளி உடை ஊசியை கண்டெடுத்துள்ளார். அதுவும் இதே போன்று தான் இருக்கும் என்று டேவிட் குறிப்பிடுகிறார். இதையும் தனது மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு தான் கண்டுபிடித்து உள்ளார். அந்த வெள்ளி உடை ஊசியும் அதிக மதிப்பை கொண்டது. கடந்த அக்டோபர் மாதத்தில் அதை கண்டெடுத்துள்ளார். அதன் மதிப்பு 10,000 யூரோ என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சம் ஆகும்.

    எது எப்படியோ, இப்படியொரு அதிசய நிகழ்வு நமக்கும் நடக்காதா என்று ஏங்கி தவிக்கும் மக்கள் தான் அதிகம்.

    Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • #208 – Behind the Scenes at the CloudFest Hackathon
    • #207 – Rob Ruiz on WP Rig and the Future of Theme Development
    • #206 – Jonathan Desrosiers on WordPress Sustainability, Community Engagement, and Release Strategies
    • #205 – Matt Cromwell on Redefining WordPress Product Growth in a Crowded Ecosystem
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.