ஆம், வடக்கு வேல்ஸ் என்கிற நகரத்தில் உள்ள தனது நிலத்தில் அவர் தோண்டி கொண்டிருக்கும் போது 800 வருட பழமையான தங்க உடை ஊசியை கண்டெடுத்துள்ளார். இதன் மதிப்பு 100,000 யூரோவாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியை இது தாண்டுகிறது. இந்த உடை ஊசியை ஆய்வு செய்த நிபுணர்கள் இதில் மரகத கற்கள் பதிந்த உடை ஊசி என்பதை கண்டறிந்து கூறியுள்ளனர்.
இந்த உடை ஊசி நான்கு இன்ச் அளவில் உள்ளது. மேலும் இதன் எடை 4 கிராமாக உள்ளது. இப்படியொரு பழமையான பொருளை கண்டுபிடித்ததை டேவிட்டால் நம்பவே முடிவதில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். இது போன்ற ஒரு அதிர்ஷ்டமான ஒன்றிற்காக தான் இவ்வளவு நாள் தான் காத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உடை ஊசியை டேவிட் கண்டுபிடித்த போது அவருக்கு இருந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. இப்படியொரு புதையல் தனக்கு கிடைத்ததை நினைத்து அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்.
Additionally learn… டேட்டிங் சென்ற பெண்ணிடம் ஹோட்டல் பில்லில் சரிபாதி பணத்தை கேட்ட ஆண் நண்பர்!
இதற்கு முன் அவரது நிலத்தை ஒரு முறை தோண்டிய போது அதில் வெள்ளி உடை ஊசியை கண்டெடுத்துள்ளார். அதுவும் இதே போன்று தான் இருக்கும் என்று டேவிட் குறிப்பிடுகிறார். இதையும் தனது மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டு தான் கண்டுபிடித்து உள்ளார். அந்த வெள்ளி உடை ஊசியும் அதிக மதிப்பை கொண்டது. கடந்த அக்டோபர் மாதத்தில் அதை கண்டெடுத்துள்ளார். அதன் மதிப்பு 10,000 யூரோ என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சம் ஆகும்.
எது எப்படியோ, இப்படியொரு அதிசய நிகழ்வு நமக்கும் நடக்காதா என்று ஏங்கி தவிக்கும் மக்கள் தான் அதிகம்.
Apply @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Apply @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube