அந்த வீடியோவில், எந்த ஒரு காரணமும் இல்லாமல் ரயிலை நிறுத்தி விட்டு மிக சாதாரணமாக பயணிகளின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், அந்த ரயில் ஓட்டுநர் அருகில் இருந்த கடைக்கு சென்று தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். இப்படி செய்ததால் அங்கிருந்த பயணிகள் தங்களது பாதுகாப்பு என்னாவது என்று நினைத்து கொண்டு அதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பாகிஸ்தானின் ரயில்வே துறை அமைச்சர் அசாம் கான் பார்த்துவிட்டு, அந்த ரயில் ஓட்டுநரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்மூலம் அந்த ஓட்டுனரின் வேலை பறிபோனது.
இந்த ரயில் சேவையானது கிழக்கு நகரான லாகூர் மற்றும் தெற்கே கராச்சியை நோக்கிய பயணத்தை கொண்டது. இதற்கிடையில் தான் பாதுகாப்பு இல்லாத முறையில் ரயிலை நிறுத்தியுள்ளார் அந்த ஓட்டுநர். இது குறித்து அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் கூறுகையில், “நாட்டின் சொத்துக்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த எவரையும் அனுமதிப்பதில்லை. இதற்கு முன் இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை. இனி எதிர் காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்ட உடன் நெட்டிசன்கள் இதை வைரலாக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக பலர் இந்த வீடியோவிற்கு சிரிப்பு கொண்ட எமோஜியை பயன்படுத்தி உள்ளனர். மேலும் பலர் கிண்டலான முறையில் அந்த இரயில் ஓட்டுநரை கலாய்த்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Additionally learn… டேட்டிங் சென்ற பெண்ணிடம் ஹோட்டல் பில்லில் சரிபாதி பணத்தை கேட்ட ஆண் நண்பர்!
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாகிஸ்தானில் ரயிலில் சென்ற 60 பேர் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பரிதாபமாக உயிர் இழந்தனர். அப்போது அந்த ரயிலை ஒட்டிய ஓட்டுநர் கடைசி வரை மக்களை காப்பாற்ற போராடினர். இருப்பினும் அந்த கோரமான சம்பவத்தை தடுக்க முடியவில்லை. ஓட்டுநருக்கும் பலத்த காயங்கள் இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த ஊர் மக்கள் தான் இவரை காப்பாற்றி உள்ளனர்.
செய்திகளை தமிழில் உடனுக்குடன் நியூஸ்18-ல் அறிந்திடுங்கள். இன்றைய முக்கிய செய்திகள், அண்மை செய்திகள், என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் அறியலாம்.